
பிக் பாஸ் வீட்டில் காதல் மன்னனாக அனைத்து இளம் பெண் போட்டியாளர்களிடமும் ஜாலியாக, பேசி பழகி வருபவர் நடிகர் கவின். தற்போது இவரை பற்றி தான் பிரச்சனை ஆரம்பமாகியுள்ளது.
கவின் தன்னை விட்டு கொஞ்சம் கொஞ்சமாக விலகி லாஸ்லியாவிடம் நெருங்கி பழகி வருவதாக நினைத்து அதனை கவினிடம் கூறுகிறார் சாக்ஷி. அதற்கு கவின் அவரை சமாதானப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
இதுகுறித்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில், பழைய மாதிரி நீ இல்ல, அடிக்கடி லாஸ்லியா கூட தான் பேசுற என்று சாக்ஷி கூறுகிறார். அதற்கு நான் என்ன செய்தேன் என கேட்க, உன் மனசையே கேள் என சாக்ஷி கூறுகிறார்.
இதற்கு கவின் மச்சான் மதியம் கூட உன் கூட தான் சாப்பிட்டேன் என்று பேசி சமாதானம் செய்கிறார். நேற்றைய தினம் இளம் பெண் போட்டியாளர்கள் அனைவரும் தன்னுடைய அத்தை பெண்கள் மாதிரி தான் பார்க்கிறேன். யாரையும் காதலிக்கவில்லை என கூறிய கவினை தற்போது சாக்ஷி காதலிப்பது போல் பேசுவது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மேலும் ஏற்கனவே கவினை அண்ணா என அழைத்த போதிலும் அவரை குறிவைத்து சாக்ஷி தற்போது காதல் பிரச்னையை துவங்கியுள்ளது பேசியுள்ளது, அனைத்து ரசிகர்களுக்கும் சாக்ஷி மீது கோபத்தை வரவழைத்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.