காதலுக்காக லாஸ்லியா - கவின் செய்த விதி மீறல் என்ன தெரியுமா? வைரலாகும் வீடியோ..!

Published : Aug 25, 2019, 12:00 PM IST
காதலுக்காக லாஸ்லியா - கவின் செய்த விதி மீறல் என்ன தெரியுமா?  வைரலாகும் வீடியோ..!

சுருக்கம்

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒரு புதிய இளம் காதல் ஜோடி உருவாகி உள்ளது. இதே பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா ஒருதலையாக காதலித்த போது, அவருக்கு கிடைத்த வரவேற்பு, கவின் - லாஸ்லியா காதலிக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான்.  

பிக்பாஸ் வீட்டில் தற்போது ஒரு புதிய இளம் காதல் ஜோடி உருவாகி உள்ளது. இதே பிக்பாஸ் வீட்டில் நடிகை ஓவியா ஒருதலையாக காதலித்த போது, அவருக்கு கிடைத்த வரவேற்பு, கவின் - லாஸ்லியா காதலிக்கு கிடைக்கவில்லை என்பது வருத்தம் தான்.

இந்நிலையில் நேற்றையதினம் , பிக்பாஸ் வீட்டில் விதிமீறல் நடைபெற்றுள்ளதாக ப்ரோமோ மூலம் தெரிவித்திருந்தார் நடிகர் கமலஹாசன். குறிப்பிட்ட காட்சி வெளியானபோது, சரியாக யார் என்று அடையாளம் தெரியாவிட்டாலும், மக்கள் பலர், கமலிடம் தற்போது சிக்கியுள்ளது லாஸ்லியா - கவின் ஜோடி என சரியாக கணித்து கூறினர்.

இதுகுறித்து நேற்றைய தினம் கமல் பேசிய போது, அவர்களுடைய தனிப்பட்ட காதல் விஷயத்தில் மூக்கை நுழைக்காமல் மிகவும் நாசுக்காக,...  இங்கு பேசமுடியாத விஷயம் என்றால் வெளியில் சென்றவுடன் பேசி கொள்ளலாமே என கூறினார். 

பின் ரசிகர்களும், மக்களும் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்த விதிமீறல் காட்சி ஒளிபரப்பப்பட்டது. இதில் லாஸ்லியா "நீ கோபப்பட்டால் நானும் கோப படுகிறேன், மூஞ்சை தூக்கி வைத்து கொள்கிறேன் என கூறுகிறார்'. இந்த உரையாடல் யாரும் இல்லாத இருட்டு அறையில் நடைபெறுகிறது. 

அப்போது திடீர் என கவின், தன்னுடைய மைக்கின் பேட்டரியை  கழற்றுகிறார். பின் இதே போல லாஸ்லியாவும் தன்னுடைய மைக் பேட்டரியை கழற்றி விட்டு, இருவரும் காதில் ஏதோ ரகசியமாக பேசுகிறார்கள். 

இந்த காட்சி இதோ:

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Rocking Star Yash: யஷ் குளோபல் ஸ்டார் ஆன கதை! இதன் பின்னணியில் உள்ள ஒரு 'மகா மந்திரம்'!
Hi Movie First Review : கவின் - நயன் ஜோடி பாஸ் ஆனதா? ஃபெயில் ஆனதா? ஹாய் படத்தின் முதல் விமர்சனம் இதோ