’ஆண் இனமே நயன்தாராவை வணங்கிடுமாம்’...லீக்கான ‘பிகில்’படப்பாடல்...

Published : Jul 17, 2019, 10:52 AM IST
’ஆண் இனமே நயன்தாராவை வணங்கிடுமாம்’...லீக்கான ‘பிகில்’படப்பாடல்...

சுருக்கம்

நடிகர் விஜய்யின் ‘பிகில்’படப்பாடல் ஒன்று திருட்டுத்தனமாக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதால் இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் திகில் அடைந்துள்ளனர். 31 வினாடிகள் மட்டுமே ஓடும் அப்பாடலை ரஹ்மான் பாடியுள்ளார்.

நடிகர் விஜய்யின் ‘பிகில்’படப்பாடல் ஒன்று திருட்டுத்தனமாக வலைதளங்களில் பகிரப்பட்டுள்ளதால் இயக்குநர், தயாரிப்பாளர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட படக்குழுவினர் திகில் அடைந்துள்ளனர். 31 வினாடிகள் மட்டுமே ஓடும் அப்பாடலை ரஹ்மான் பாடியுள்ளார்.

அட்லீ இயக்கத்தில் விஜய் மூன்றாவது முறையாக இணைந்து நடித்து வரும் படம் ’பிகில்’. விஜயின் 63-வது படமாக உருவாகி வரும் இதை ஏ.ஜி.எஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு படத்தின் டைட்டிலும், ஃபர்ஸ்ட் லுக்கும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் தீபாவளிக்கு திரையரங்குகளில் வெளியாவதற்கான வேலைகள் துரிதமாக நடந்து வருகின்றன.விஜய்  அப்பா, மகன் என்று இரண்டு வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ‘வெறித்தனம்’ என்ற பாடலை விஜய் பாடவுள்ளார் என்ற தகவல் வெளியானது. இதில் கதாநாயகியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் ரெபா மோனிகா ஜான், இந்துஜா என்று இன்னும் ஏராளமானோர் நடித்துள்ளனர்.

இந்நிலையில் ‘பிகில்’ படத்தின் பாடல் ஒன்று நேற்று இணையத்தில் திருட்டுத் தனமாக வெளியானது. ‘சிங்கப்பெண்ணே...சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்கிடுமே...’ எனத் தொடங்கும் அப்பாடலை  ஏ.ஆர்.ரஹ்மான் பாடியுள்ளார். ’பிகில்’ ஷூட்டிங்கின் போதே பல்வேறு புகைப்படங்கள் வெளிவந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியளித்த நிலையில் மீண்டும் ஒரு பாடலும் லீக்காகி இருப்பது விஜய்யின் ‘பிகில்’படக்குழுவை பெரும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தங்கமயிலுக்கு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பிய சரவணன்! முடிவுக்கு வருகிறதா திருமண வாழ்க்கை?
அப்பாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிக்க ஆசை இவ்வளவு மக்கள் Support பண்றாங்க.. சண்முக பாண்டியன்