
மிகவும் சர்ச்சைக்குள்ளாகி, கைவிடப்பட்டு மீண்டும் துவங்கப்பட்ட ’லக்ஷ்மி பாம்’படத்தின் தனது திருநங்கை தோற்ற முதல் பார்வையை சிவராத்திரி கொண்டாட்டத்தை முன்னிட்டு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் நடிகர் அக்ஷய் குமார்.
ராகவா லாரன்ஸ் இயக்கி நடித்த படம் ‘காஞ்சனா’. 2011 ஆம் ஆண்டு வெளியான இப்படம் பெரும் வரவேற்பைப் பெற்றது. இப்படம் கன்னடம், சிங்களம் மற்றும் வங்காள மொழியிலும் மொழிமாற்று செய்யப்பட்டது.எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது இந்தியில் மொழிமாற்று செய்யப்பட்டு வருகிறது.லாரன்ஸே இயக்குகிறார். துவக்கத்தில் தயாரிப்பாளருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு படத்தை விட்டு வெளியேறிய லாரன்ஸ், பின்னர் சமாதாமடைந்து இயக்கத் துவங்கினார்.
‘லட்சுமி பாம்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தில் அக்ஷய் குமார், கியாரா அத்வானி உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.‘காஞ்சனா’படத்தில் சரத்குமார் திருநங்கையாக நடித்திருந்தார். லாரன்ஸும் சில காட்சிகளில் திருநங்கையாகத் தோன்றுவார்.அதே போல் அக்ஷய் குமாரும் திருநங்கையாக நடித்துள்ளார். அவர், திருநங்கை வேடத்தை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அப்பதிவில்,... நமக்குள் இருக்கும் பெண் தெய்வத்தை வணங்கி நமது அளவில்லா வலிமையைக் கொண்டாடுவதுதான் நவராத்திரி.
இந்த மங்களகரமான நாளில் எனது ‘லக்ஷ்மி’ தோற்றத்தை உங்களுடன் பகிர்கிறேன். இந்தக் கதாபாத்திரத்தை நான் ஆர்வமாக எதிர்நோக்கும் அதே நேரத்தில் பதட்டமாகவும் உணர்கிறேன். நாம் சவுகரியமாக உணரும் சூழலின் முடிவில்தான் வாழ்க்கை தொடங்குகிறது இல்லையா?” என்று தெரிவித்துள்ளார் அக்ஷய் குமார். அவரது திருநங்கைத் தோற்றத்தை வைரலாக்கிவரும் அவரது ரசிகர்கள் தனது நடிப்பில் தொடர்ந்து வெரைட்டி காட்டிவரும் நடிகர்களில் எங்கள் அக்ஷய்க்கு இணையாக யாராவது இருக்கிறார்களா என்று காலரைத் தூக்கிவிட்டுக்கொண்டிருக்கிறார்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.