
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த் சென்னை ஆழ்வார் பேட்டையில் டிராவல் எக்ஸ்சேன்ஜ் இந்தியா என்கிற பெயரில் ஒரு நிறுவனத்தை நடத்தி வருகிறார். இந்த நிறுவனம் மாநகராட்சிக்கு சொந்தமான கட்டடத்தில் இயங்கி வருகிறது.
இந்நிலத்தில் இதற்கு முன் இந்தக் கட்டடத்திற்கு 3,702 ரூபாய் வாடகையாக லதா ரஜினிகாந்த் செலுத்தி வந்தார். தற்போது வாடகையை மாநகராட்சி 21 ஆயிரத்து 160 ரூபாயாக உயர்த்தியது.
இதற்கு லதா ரஜினிகாந்த் தனக்கு இந்த அளவிற்கு வாடகை கொடுப்பதற்கு வசதி இல்லை என்று கூறி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். விசாரணைக்கு எடுத்துக்கொண்ட இந்த மனுவை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.
மேலும் நீதிபதி தனது தீர்ப்பில் கூறியிருப்பதாவது...
மாநகராட்சியின் உயர்த்தப்பட்ட வாடகையை ஏற்பதா வேண்டாமா என்று லதா ரஜினிகாந்த் முடிவு செய்து கொள்ளலாம். ஒரு மாத காலத்திற்குள் உயர்த்தப்பட்ட வாடகையை இவர் செலுத்தியாக வேண்டும். அப்படி செலுத்தாவிட்டால் இந்த இடத்தை மாநகராட்சி ஏலம் விட வேண்டும்.
அந்த ஏலத்தில் கலந்துகொண்டு லதா ரஜினிகாந்த் மீண்டும் அந்த இடத்தைப் பெற்றுக் கொள்ளலாம். ஏலம் அறிவிக்கப்பட்ட பிறகும் லதா ரஜினிகாந்த் இடத்தை காலி செய்யாவிட்டால் போலீஸ் உதவியுடன் மாநகராட்சி இந்த இடத்தை காலி செய்து கொள்ளலாம் என்று அந்தத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
ரஜினி ரசிகர்களை சந்தித்து அவர்களுக்கு அறிவுரை வழங்கி வரும் நேரத்தில், இந்த தீர்ப்பு வெளியாகியுள்ளது சிறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தனக்கு சாதகமான தீர்ப்பு வரும் எதிர்பார்த்த லதா ரஜினிகாந்துக்கு இந்த தீர்ப்பு கண்டிப்பாக அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும். இதனால் மாநகராட்சி நிர்ணயித்த வாடகையை செலுத்தி விடலாமா என்று யோசித்து வருகிறாராம் லதா.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.