கட்டப்பா பற்றி மேலும் ஒரு ரகசியத்தை வெளிப்படுத்திய குஷ்பு... 

 
Published : May 08, 2017, 04:26 PM ISTUpdated : Sep 19, 2018, 03:15 AM IST
கட்டப்பா பற்றி மேலும் ஒரு ரகசியத்தை வெளிப்படுத்திய குஷ்பு... 

சுருக்கம்

kushpoo reveal sathiyaraj suspense

ராஜமௌலி இயக்கிய இரண்டாம் பக்கத்தில் ,ரசிகர்கள்  அனைவரும் எதிர் பார்த்து கார்த்துக்கொண்டிருந்த தருணம்,   'பாகுபலி'யை கட்டப்பா ஏன் கொலை செய்தார் என்ற ரகசியம் தெரியவேண்டும்  என்பதற்காகத்தான். அந்த அளவிற்கு சத்யராஜின் கதாபாத்திரம் மிகவும் முக்கியமானது.

இந்த நிலையில் கட்டப்பா கேரக்டரில் நடித்த சத்யராஜ் குறித்த ரகசியம் ஒன்றை நடிகை குஷ்பு தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்.

அதில் , 'சத்யராஜை  தவிர வேறு யாராவது கட்டப்பா கேரக்டரில் நடித்திருந்தால் பாகுபலிக்கு இவ்வளவு பெரிய ஹிட் கிடைத்திருக்குமா என்பது சந்தேகமே. இப்போது நான் ஒரு ரகசியத்தை சொல்லப்போறேன். சத்யராஜூக்கு ஜோடியாக அதிக படங்களில் நான் தான் நடித்துள்ளேன் என்று கூறியுள்ளார்.

இந்தியாவின் மிகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் சத்யராஜ். கொடுக்கப்பட்ட கேரக்டரை உள்வாங்கி கொண்டு அந்த கேரக்டராகவே மாறிவிடுவதில் அவர் வல்லவர்.

 'பெரியார்' படத்தில் மிக அற்புதமாக நடித்திருந்தும் அவருக்கு தேசிய விருது கிடைக்காதது ஏமாற்றமே. ஆனாலும் இந்த முறை அவருக்கு கட்டப்பா கேரக்டர் விருதை பெற்றுத்தரும் என்று நம்புகிறேன்' என்று மேலும் குஷ்பு கூறியுள்ளார்.

சத்யராஜூடன் இணைந்து குஷ்பு 'புரட்சிக்காரன்', வீரநடை', 'உன்னை கண் தேடுதே', 'பிரம்மா', 'கல்யாண கலாட்டா', ரிக்சா மாமா', 'பெரியார்', 'மலபார் போலீஸ்', 'நடிகன், 'வெற்றிவேல் சக்திவேல்', 'சுயம்வரம் போன்ற படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

'ரவுடி ஜனார்தனா' கிளிம்ப்ஸ்: குறி தப்பாது! மிரட்டலான கேங்ஸ்டர் அவதாரத்தில் விஜய் தேவரகொண்டா!
செந்தில் பேச்சை கேட்காத பாண்டியன்: இருந்தாலும் இம்புட்டு வைராக்கியம் ஆகாது: குடும்பத்தில் வெடிக்கும் அடுத்த சண்டை!