40 ஆண்டுகளுக்கு மேல் எம்.ஜி.ஆரிடம் மெய்க்காப்பாளராக பயணித்த கே.பி.ராமகிருஷ்ணன் காலமானார்..!

By manimegalai aFirst Published Feb 3, 2021, 9:55 PM IST
Highlights

மண்ணை விட்டு மறைந்தாலும்... மக்கள் மனதை விட்டு தற்போது வரை நீங்காத  மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரிடம், மெய்க்காப்பாளராகவும், உதவியாளராகவும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் இன்று காலமானார்.
 

மண்ணை விட்டு மறைந்தாலும்... மக்கள் மனதை விட்டு தற்போது வரை நீங்காத  மறைந்த முதல்வர் எம்.ஜி.ஆரிடம், மெய்க்காப்பாளராகவும், உதவியாளராகவும் சுமார் 40 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றிய கே.பி.ராமகிருஷ்ணன் இன்று காலமானார்.

91 வயதாகும் இவர், ஒரு சில படங்களில் எம்.ஜி.ஆர் மற்றும் நம்பியார் ஆகியோருக்கு டூப் போட்டு நடித்தவர். மேலும் சுமார் 40 வருடங்களுக்கு மேலாக எம்.ஜி.ஆரின் உண்மை விசுவாசியாகவும், அவரது மெய் காப்பாளராகவும் புரட்சி தலைவருக்கு நிழல் போல் வாழ்ந்தவர்.

வயோதிகம் காரணமாக தற்போது மகனுடன் வசித்து வந்த கே.பி.ராமகிருஷ்ணன், படிக்கட்டில் இருந்து கால் இடறி ஜனவரி 27 ஆம் தேதி கீழே விழுந்துள்ளார். உடனடியாக இவரை பிரபல தனியார் மருத்துவமனையில் அவரது குடும்பத்தினர் அனுமதித்தனர். கீழே விழுந்ததில், கே.பி.ராமகிருஷ்ணனுக்கு தலையில் அடிபட்டு மூலையில் கட்ட கட்டு ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

வயோதிகம் காரணமாக அறுவை சிகிச்சை செய்து ரத்த கட்டை அகற்ற முடியாததால், ஊசி மூலம் சரி செய்ய முயன்றும் அது முடியாமல் போனது. எனவே சென்னை ராஜூவ்கந்தி பொது மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்க பட்ட கே.பி.ராமகிருஷ்ணன் சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். 

தற்போது கே.பி.ராமகிருஷ்ணன் மறைவுக்கு பலர் தொடர்ந்து தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள். நாளை இவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படும் என இவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

click me!