உலக நாடுகளை கடந்து, இந்தியாவில் உள்ள அணைத்து மக்களையும் பெருமளவு அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற, மருத்துவர்கள், போலீசார், துப்புரவு பணியாளர்கள், போன்ற பலர் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் சேர்ந்து தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
கொரோனா அச்சுறுத்தல்:
உலக நாடுகளை கடந்து, இந்தியாவில் உள்ள அணைத்து மக்களையும் பெருமளவு அச்சுறுத்தி வரும் கொரோனாவின் தொற்றில் இருந்து மக்களை காப்பாற்ற, மருத்துவர்கள், போலீசார், துப்புரவு பணியாளர்கள், போன்ற பலர் மத்திய மற்றும் மாநில அரசுகளுடன் சேர்ந்து தடுப்பு பணியில் தீவிரம் காட்டி வருகிறார்கள்.
தன்னார்வலர்கள் உதவி:
அரசின் தடுப்பு பணி ஒரு பக்கம் தீவிரமாக நடந்துகொண்டிருந்தாலும், ஊரடங்கு உத்தரவின் காரணமாக.. வேலை இல்லாமல், உணவிற்காக கஷ்டப்பட்டு வரும் பலருக்கு, தன்னார்வலர்கள் தானாக முன் வந்து தங்களுடைய உதவிகளை செய்து வருகிறார்கள்.
தொண்டு நிறுவனங்கள்:
அதே நேரத்தில், தொண்டு நிறுவனங்கள் மூலம் உணவு பொருட்கள் பெறப்பட்டு கஷ்டப்பட்டு வரும் மக்களுக்கு விநியோகம் செய்யும் நடவடிக்கையும் தீவிரமாக நடந்து வருகிறது.
வெளியே வந்து உதவும் கேரள நடிகைகள்:
இந்நிலையில், மக்களுக்கு உதவும் வகையில் கேரள நடிகைகள் தானாக முன்வந்து கால் சென்டரில் பணியாற்றி வருகிறார்கள். ஏற்கனவே, கார்த்தியின் 'தம்பி' படத்தில் நடித்த நடிகை நிக்கிலா விமல், கால் சென்டரில் மக்களுக்காக பணியாற்றி வந்த நிலையில், தற்போது... மற்றொரு நடிகையும் கேரள அரசின் சார்பாக உதவிகள் பெரும் கால் சென்டரில் தானாக முன்வந்து பணியாற்றி வருகிறார்.
நடிகர் சிவரக்தியேன் ஹீரோவாக நடித்த 'மனம் கொத்திப்பறவை' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமான, ஆத்மீயா தான் தற்போது மக்களுக்கு உதவும் நோக்கில் பணியாற்றி வருகிறார்.
வெளியே வராத தமிழ் நடிகைகள்:
கேரள திரையுலகில் வளர்ந்து வரும் நடிகைகளே, மக்கள் மீது உள்ள அக்கறையால் தானாக முன் வந்து பணி செய்து வரும் நிலையில், தமிழில் கோடி கணக்கில் சம்பளம் வாங்கி வரும் நடிகைகள் சிலர் வீட்டில் இருந்தபடியே விழிப்புணர்வு வீடியோவை மட்டும் வெளியிட்டு விட்டு, கப் சிப் என வெளியே தலைகாட்டாமல் உள்ளனர். இன்னும் சில முன்னணி நடிகைகள் அதை கூட செய்யவில்லை.
வளர்ந்து வரும் நடிகைகளாவது இதுவரை எதுவும் செய்யவில்லை என்றாலும்... இனியாவது செய்வார்களா என்று பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.