படப்பிடிப்பில் பரபரப்பு...கையில் அரிவாளுடன் கருணாஸ் எம்.எல்.ஏ.வின் மகன்...

By Muthurama LingamFirst Published Feb 20, 2019, 11:11 AM IST
Highlights

அ.தி.மு.க.-பி.ஜே.பி. கூட்டணிக்கு எதிராக தந்தை கருணாஸ் எம்.எல்.ஏ. கம்பெடுத்து சுழற்றி வரும் நிலையில் அவரது மகன் கென் கருணாஸ் கையில் அரிவாளுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்று வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஆனால் அச்சப்படவேண்டிய அவசியமில்லை. அவர் அப்படி அமர்ந்திருப்பது படப்பிடிப்பு தளத்தில்தான்.

கருணாஸ் எம்.எல்.ஏ.வின் வாரிசு கென் கருணாஸ் ப்ளஸ் டூ படித்துவருகிறார். ஏற்கனவே ‘தேசிய நெடுஞ்சாலை’, ‘அழகு குட்டி செல்லம்’ போன்ற படங்களில் நடித்திருக்கும் அவர் லேட்டஸ்டாக தனுஷ், வெற்றி மாறன் கூட்டணியில் உருவாகிவரும் ‘அசுரன்’ படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடிக்கிறார். 

முழுக்க முழுக்க சாத்தூர், கோவில்பட்டி நகரங்களை ஒட்டியுள்ள காட்டுப் பகுதிகளில் நடைபெற்றுவரும் ‘அசுரன்’ படப்பிட்டிப்பில் கடந்த 10 நாட்களாகக் கலந்துகொண்டுவரும் கென் கருணாஸ் படப்பிடிப்புக் குழுவினருடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் ஒன்றை இயக்குநர் சுப்பிரமணியம் சிவா தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருந்தார். இப்புகைப்படத்தில் கையில் அரிவாள் வைத்திருக்கும் கென் கருணாஸின் படம் தற்போது வலைதளங்களில் வைரலாகிவருகிறது. ஷூட்டிங் முடிஞ்ச உடனே இனிமே அரிவாளைக் கையில எடுக்காதீங்க தம்பி.

இப்படத்தில் இயக்குநர் பாலாஜி சக்திவேல் ஒரு முரட்டுக் காவல் அதிகாரி வேடத்தில் நடித்துவருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

click me!