"யான் கண்டதிலேயே இந்த டீம்தான் பெஸ்ட்...!" கீர்த்தி சுரேஷ் சர்டிஃபிக்கேட்...! அது எந்த டீம் தெரியுமா?..

Published : Nov 07, 2019, 07:11 PM IST
"யான் கண்டதிலேயே இந்த டீம்தான் பெஸ்ட்...!" கீர்த்தி சுரேஷ் சர்டிஃபிக்கேட்...! அது எந்த டீம் தெரியுமா?..

சுருக்கம்

'நடிகையர் திலகம்' படத்தின் மூலம் தேசிய விருது வென்ற நடிகையாக உச்சம் தொட்டுள்ள கீர்த்தி சுரேஷ், தற்போது, ஹிந்தியில் அறிமுகமாகும் படம் மற்றும் தமிழ், தெலுங்கு, மலையாளத்தில் தலா ஒரு படம் என பிஸியாக நடித்து வருகிறார். 

இதில், தமிழில் பிரபல இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் தயாரிப்பில் அவர் நடிக்கும் படம் 'பெண்குயின்'. தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் தயாராகும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் ஈஸ்வர் கார்த்திக் இயக்குகிறார். 

ஹீரோயினுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதையம்சத்துடன் உருவாகும் இந்தப் படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார். கார்த்திக் பழனி ஒளிப்பதிவு செய்ய அனில் கிரிஷ் எடிட்டிங்கை கவனிக்கிறார். 


கடந்த செப்டம்பர் 12ம் தேதி தொடங்கிய 'பெண்குயின்' படத்தின் படப்பிடிப்பு, தற்போது நிறைவடைந்துள்ளது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் திட்டமிட்டபடியே 53 நாட்களுக்குள் முழு படப்பிடிப்பையும் படக்குழு நடத்தி முடித்துள்ளதுதான். 

'பெண்குயின்' படக்குழுவினரின் இந்த அசுரவேக உழைப்பை பார்த்து வியந்து போன நடிகை கீர்த்தி சுரேஷ், அவர்களை வெகுவாக பாராட்டியுள்ளார்.
இதுதொடர்பாக கீர்த்தி சுரேஷ் தனது சமூக வலைத்தள பக்கத்தில், "நான் பணியாற்றிய படக்குழுவினர்களில் இந்த படத்தின் குழுவினர்கள் மிகவும் சிறந்தவர்கள் - இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே பல இனிமையான அனுபவங்கள் எனக்கு ஏற்பட்டது - இந்த படத்தை திரையில் காண மிகுந்த ஆர்வத்துடன் இருக்கிறேன்"  என பாராட்டியுள்ளார். 

'பெண்குயின்' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்ததை அடுத்து, இன்னும் ஒரு சில தினங்களில் போஸ்ட் புரடொக்ஷன் பணிகள் தொடங்கும் என தெரிகிறது. விரைவில், படத்தின் டீசர், இசை மற்றும் ரிலீஸ் தொடர்பான அறிவிப்புகளை படக்குழுவிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!