
பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வின்னராக ஆவார் என எதிர்ப்பார்க்கப்பட்ட, கவின் திடீர் என பிக்பாஸ் கொடுத்த 5 லட்சம் பணத்தை எடுத்து கொண்டு வெளியேறுவதாக கூறினார். அவர் வெளியேறுவதை போட்டியாளர்கள் அனைவரும் தடுத்தும் இந்த முடிவை இப்போது தான் எடுக்க வில்லை, ஏற்கனவே நான் முடிவு செய்த விஷயம். பிக்பாஸ் 5 லட்சம் தருவதால் அதையும் எடுத்து கொண்டு வெளியேற உள்ளதாக தெரிவித்தார்.
இவர் வெளியில் வந்ததுமே, அம்மா, பாட்டி, உள்ளிட்ட மூன்று பேர், மோசடி புகாருக்காக கைது செய்யப்பட்ட விஷயம் அறிந்து அதிர்ந்து போன கவின், முதல் வேலையாக அவர்களை ஜாமினில் எடுக்க முடிவு செய்து, வக்கீலை தொடர்பு கொண்டு பேசி கைது செய்யப்பட்ட மூவரையும் ஜாமினில் எடுத்துள்ளார்.
மேலும், கடன் தொகை அனைத்தையும் தானே அடைப்பதாகவும் சம்பந்த பட்டவர்களிடம் கண் கலங்கியவாறு பேசிய நெகிழ்ச்சி சம்பவங்கள் இந்த ஓரிரு நாட்களின் நடந்துள்ளதாக கூறப்படுகிறது.
கவின் வீட்டை விட்டு வெளியேறியதில் இருந்து, எந்த ஒரு பேட்டியும் கொடுக்கவில்லை என்றாலும், கண்டிப்பாக இன்றைய தினம் கமல் கலந்து கொள்ளும் நிகழ்ச்சியில் பங்கேற்று பேசுவார் என மக்கள் ஆவலோடு காத்திருக்கிறார்கள்.
ஆரம்பத்தில் கவினை பலருக்கு பிடிக்கவில்லை என்றாலும், தற்போது பலரது பேவரட், பிக்பாஸ் பிரபலம் இவர்தான். ஓவியாவை அடுத்து ரசிகர்கள் பலர் இவருக்கு தான் அதிக அளவில் சப்போர்ட் செய்து வந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.