தெர்மாகோல் டாஸ்கால் தர்ஷன் - கவினுக்குள் வெடிக்கும் புது பிரச்சனை! ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!

Published : Sep 18, 2019, 01:05 PM IST
தெர்மாகோல் டாஸ்கால் தர்ஷன் - கவினுக்குள் வெடிக்கும் புது பிரச்சனை! ரணகளமாகும் பிக்பாஸ் வீடு!

சுருக்கம்

ஒவ்வொரு வாரமும் பிக்பாஸ் தரப்பினர், ஹவுஸ் மேட்சுக்கு ஏதேனும் வித்தியாசமான டாஸ்க் கொடுத்து வருகிறார்கள் என்பது ரசிகர்கள் அறிந்தது தான். இத்தனை வாரங்கள் மிகவும் எளிமையான டாஸ்க்குகளை செய்து வந்த பிரபலங்கள், நிகழ்ச்சி தற்போது இறுதி கட்டத்தை நெருங்கி வருவதால், டாஸ்குகளும் கடுமையாக்கப்பட்டுள்ளது.  

குறிப்பாக இந்த வாரம், போட்டியாளர்கள் அனைவரும் சேர்ந்து, சற்று கடுமையான டாஸ்குகளை செய்து வருகிறார்கள். 

அந்த வகையில் இன்றைய தினம், 7 போட்டியாளர்களுக்கும் தெர்மாகோல் நிரப்பிய பைகள் கொடுக்கப்படுகிறது. ஒருவர் பின் ஒருவர் ஓடி, மற்றொருவர் பையில் உள்ள தெர்மாகோலை வெளியே எடுக்க வேண்டும்.

இந்த போட்டி குறித்த முதல் ப்ரோமோவில்... லாஸ்லியா கீழே விழும் காட்சியும், ஷெரின் கால்களை சேரன் அமுக்கி விடும் காட்சிகள் இடம்பெற்றிருந்தது.

இதை தொடர்ந்து தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோவில்... தர்ஷனுக்கும் - கவினுக்கும் இடையே சண்டை வெடிக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது. அதாவது கவின் - தர்ஷன் பையில் உள்ள தெர்மாகோலை எடுப்பதற்காக பையில் ஓட்டையை ஏற்படுத்தியும், தன்னிடம் இருந்த பையை பிடுங்குகிறார் என குற்றம் சாட்டுகிறார். எப்படி இழுத்தார் என்பதை முகேன் உள்ளிட்ட அனைவருக்கும் செய்தும் காட்டுகிறார் தர்ஷன்.

மேலும் கவினுக்கு, லாஸ்லியா சப்போர்ட் செய்வது போன்று தெரிகிறது. எனினும் தொடர்ந்து கோவமாக உள்ள தர்ஷன் குரலை உயர்த்தி பேசுகிறார். இந்த ஒரு டாஸ்க்கல் இன்று பிக்பாஸ் வீட்டில் பிரச்சனை ஏற்படுகிறது என்பது மட்டும் உறுதி. 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஆக்‌ஷனில் இறங்கிய பாண்டியன்: போதுமுடா சாமி…பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் இந்த வார புரோமோ வீடியோ!
அகண்டா 2 பொங்கலுக்கு வந்தால் யாருக்கு நஷ்டம்? விஜய், பிரபாஸ், சிரஞ்சீவி போட்டி!