காதல் கொண்டேன் பட நடிகரா இவர்..? அதுவும் பெண்ணாக...?

 
Published : Feb 15, 2018, 05:58 PM ISTUpdated : Sep 19, 2018, 01:57 AM IST
காதல் கொண்டேன் பட நடிகரா இவர்..? அதுவும் பெண்ணாக...?

சுருக்கம்

kathal konden movie actor put ladies getup

இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில், நடிகர் தனுஷ், சோனியா அகர்வால் மற்றும் சுதீப் சராங்கி நடித்து கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'காதல் கொண்டேன்'.

இந்த படத்தில் நடித்த சுதீப் சாரங்கி தற்போது லேடிஸ் கெட்டப்பில் உள்ள ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதை பார்த்து பல ரசிகர்கள் இவர் பெண்ணாக மாறி விட்டாரா என ஒரு நிமிடம் ஆடியே போய் விட்டனர். பின்புதான் தெரிந்தது தற்போது இவர் நடித்துக் கொண்டிருக்கும் பாலிவுட் திரைப்படத்தில் பெண்ணாக அவர் நடிக்கிறார் என்று.

சுதீப் சாரங்கி:

பிரபல பாலிவுட் நடிகரான சுதீப் சாரங்கி, காதல் கொண்டேன் திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் இதை தொடர்ந்து ஒரு சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். மேலும் ஹிந்தியில் ஒளிபரப்பான தொலைக்காட்சி தொடரிலும் நடித்துப் பிரபலமானவர். 

பெண் வேடம்:

பாலிவுட் திரைப்படங்களில் தற்போது நடித்து வரும் இவர், பெண் வேடம் போட்டு, ஆளே அடையாளம் தெரியாமல் மாறியுள்ளார். ஆரம்பத்தில் இவருடைய புகைப்படத்தை பார்த்த பல ரசிகர்கள் சுதீப் பெண்ணாக மாறிவிட்டாரா என அதிர்ச்சியில் உறைந்து விட்டார்களாம்.

பின் அது படத்திற்காக அவர் ஏற்றுக்கொண்ட கதாப்பாத்திரம் என தெரிந்ததும் தொடர்ந்து தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

பெரிய ஐஸ்வர்யா ராய்னு நெனப்பு... பேபினு சொன்ன வாயை உடைச்சிருவேன் - பாரு உடன் சண்டைபோட்ட கம்ருதீன்
ஷாருக்கானுக்கு இப்படி ஒரு விசித்திரமான பழக்கம் இருக்கிறதா? இவ்ளோ நாள் இது தெரியாம போச்சே..!