
ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் தருவதாக சொன்னார் கஸ்தூரி; ரஜினி ரசிகர் புகாருக்கு நெத்தியடியாக பதில் கொடுத்த கஸ்தூரி
திரைத்துறை பிரபலங்கள் பலரும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொந்தரவு குறித்து “மீ டூ” டேகில் பகிர்ந்து , பாலியல் தொந்தரவுகளுக்கு எதிரான ஒரு இயக்கத்தை சோஷியல் மீடியாவில் துவங்கி இருக்கின்றனர். இதில் பாலிவுட் தொடங்கி கோலிவுட், டோலிவுட் , மாலிவுட் என எல்லா பிரபலங்களும் தங்களுக்கு நேர்ந்த தொந்தரவு குறித்து பட்டாசை பற்றவைத்திருக்கின்றனர்.
வைரமுத்து மீது சின்மயி கொடுத்த புகார், அதை தொடர்ந்து எழுந்த சர்ச்சைகள் என மீ டூ விவகாரம் ஒரு பக்கம் ஹாட்டாக போய்க்கொண்டிருக்கிறது.
இந்த சமயத்தில் ஆண்களும் தங்களுக்கு நேர்ந்த பாலியல் தொல்லைகள் குறித்து பகிர்ந்து இன்னொரு இயக்கத்தை ஆரம்பித்திருக்கின்றனர். இதனிடையே இந்த மீ டூ இயக்கத்தினை கேலி செய்யும் வகையில் ரஜினி ரசிகர் ஒருவர் ஒரு ட்வீட்டினை செய்திருக்கிறார். அதில் நடிகை கஸ்தூரி என்னை படுக்கைக்கு அழைத்தார். ஒரு மணி நேரத்துக்கு ஒரு லட்சம் ரூபாய் தருவதாக சொன்னார். என்று அந்த நபர் தெரிவித்திருக்கிறார்.
இதற்கு நடிகை கஸ்தூரி தன் பாணியிலேயே நெத்தியடியாக ஒரு பதிலை அளித்திருக்கிறார் கஸ்தூரி. இதனால் இந்த விவகாரம் இப்போது சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. ”அட, பொய் சொல்லும்போதுகூட உண்மையை உளறிட்டான் பாருங்க. அவனால முடியாதுதான்- முடியாதவன் முடியாதுன்னு சொல்லித்தானே ஆவணும் ! #கே_கூ
ரஜினி பேரை கெடுக்க இந்த மாதிரி எத்தினி பெரு அலையறானுவளோ ! ” என கஸ்தூரி டிவிட்டரில் அந்த ட்விட்டர் பதிவில் கஸ்தூரி கேலியாக குறிப்பிட்டிருக்கிறார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.