
இயக்குனர் ஷங்கர், பிரமாண்ட செட் அமைத்து தற்போது இயக்கி வரும் 'இந்தியன் 2 ' படப்பிடிப்பு செட்டில், கிரேன் கீழே சரிந்து விழுந்து ஏற்பட்ட எதிர்பாராத விபத்தில், மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் 9 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இந்நிலையில் இந்த விபத்து நேர்ந்த போது கமலஹாசன் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்ததால், மத்திய குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணைக்காக நேற்று ஆஜரானார். இவரிடம் தொடர்ந்து மூன்று மணி நேரம் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.
இந்த விசாரணைக்கு பின், கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில செயலாளர் ஒரு செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில் கமல்ஹாசன் ஒரு நடிகர் மட்டுமே என்றாலும், அவரும் மரணத்திலிருந்து தப்பினார். விபத்திற்கு அவருக்கும் எந்த தொடர்பும் இல்லை. எனினும் அவரிடம் பல மணிநேரம் விசாரித்துள்ளனர். இது அரசியல் நோக்கங்களால் தான், மேலும் அதிகாரத்தில் உள்ளவர்கள் அவரை அச்சுறுத்த முயற்சிக்கிறார்கள் என்றும் கூறினார்.
மைக்கல் நீதி மய்யத்தின் இந்த செய்திக்குறிப்புக்கு பதிலளிக்கும் விதமாக, சர்ச்சைக்கு பஞ்சம் இல்லாமல் ட்விட் போட்டு பதிலடிக்கு கொடுக்கும் நாயகி கஸ்தூரி, சாட்டை அடி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் "3 மணி நேரம் போலீஸ் ஸ்டேஷனில் இருந்ததுக்கே அரசாங்க சதின்னு அலுத்துக்கொள்வது, கமலுக்கும், கட்சியினருக்கும் அவப்பெயரை தேடித்தரும். மூன்று உயிர்களுக்கு தலா ஒரு மணி நேரம் கூட செலவு செய்ய மாட்டாரா கமல் என்ற கேள்வி வரும். என ட்விட் செய்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.