'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' படத்திற்கு உதவி செய்த இயக்குனர் வெங்கட் பிரபு!

Published : Nov 16, 2018, 05:14 PM IST
'கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்' படத்திற்கு உதவி செய்த  இயக்குனர் வெங்கட் பிரபு!

சுருக்கம்

டுவிங்கிள் லேப்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’. கதையின் நாயகர்களாக தீபக், பிளாக் பாண்டி, ஜெய்சிந்த் ஆகியோர் நடிக்கிறார்கள். கதாநாயகிகளாக ஹரிதா, மலர் ஆகியோர் நடிக்கிறார்கள். இவர்களுடன் கொட்டாச்சி, ‘ஓகே ஓகே’ மதுமிதா, மிப்பு, ஹேமா, மகேஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.

இப்படத்தை அறிமுக இயக்குனர் எம்.ஏ.பாலா இயக்கியுள்ளார். இவர் இந்திய ராணுவத்தில் 6 வருடங்கள் ஸ்பெஷல் சர்வீஸில் பணியாற்றியவர். சினிமா மீது உள்ள ஆர்வத்தால் டிப்ளோமா பிலிம் மேக்கிங் படித்து விட்டு, பல குறும்படங்களையும், டெலி பிலிம்களையும் இயக்கியுள்ளார்.

தன்னுடைய காதலியைத் தொலைத்துவிட்டு, தேடுகிற கார்த்திகேயனின் வாழ்க்கையில் நடக்கும் விபரீதமான நிகழ்வுகளும், சம்பவங்களும் திரைக்கதையாக உருவாக்கி சுவாரஸ்யமாய், கமர்ஷியல் அம்சங்களுடன் இயக்கி இருக்கிறார் இயக்குனர் எம்.ஏ.பாலா.

இப்படத்தின் டீசரை விஜய் சேதுபதி வெளியிட்டுள்ள நிலையில், தற்போது இப்படத்தின் டிரைலர் மற்றும் பாடல்களை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார். மேலும் ‘நண்பர்களால் உருவாகும் எங்கள் படம் போல், ‘கார்த்திகேயனும் காணாமல் போன காதலியும்’ திரைப்படமும் நண்பர்களால் இணைந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நட்பு என்றும் நிலைக்கட்டும், படம் வெற்றி பெறட்டும்’ என்று படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார்.

எப்.ராஜ் பரத் இசையமைத்துள்ள இப்படத்திற்கு டேவிட் ஜான் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படம் வரும் நவம்பர் 23ம் தேதி உலகமெங்கும் வெளியாக இருக்கிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

எது பண்ணாலும் பிளான் பண்ணி பண்ணுவோம் என்று கூறும் இயக்குனர்; சூர்யாவின் 47வது பட விழா பூஜை!
தன்னுடைய திரையுலக கதாநாயகன் அஜித் குமாரை சந்தித்த நடிகர் சிம்பு!