பிரமாண்டமாக தயாராகும் கார்த்தியின் “ தேவ் “ ..! இத்தனை கோடியா...?

 
Published : Jun 01, 2018, 04:02 PM ISTUpdated : Sep 19, 2018, 02:28 AM IST
பிரமாண்டமாக தயாராகும் கார்த்தியின் “ தேவ் “ ..! இத்தனை கோடியா...?

சுருக்கம்

karthi acting dev movie budget is 55 crore

கடைக்குட்டி சிங்கம் திரைப்படத்தை தொடர்ந்து கார்த்தி நடிப்பில் பிரமாண்டமாக உருவாகி கொண்டிருக்கும்  திரைப்படம் “ தேவ் “ இப்படத்தின் படப்பிடிப்பு பல அழகிய இடங்களில் வைத்து நடைபெறவுள்ளது.

அறிமுக இயக்குனர் ரஜத் ரவிஷங்கர் இயக்கத்தில் , “ சிங்கம் -2 “ , த்ரிஷா நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள “ மோகினி “ ஆகிய படங்களை தயாரித்த பிரின்ஸ் பிக்ச்சர்ஸ் இப்படத்தை தயாரித்து வருகிறது .

முழுக்க முழுக்க ஆக்சன் படமாக உருவாகியுள்ள இப்படத்தை தயாரிப்பாளர் S. லக்ஷ்மன் எந்தவித சமரசமுமின்றி 55 கோடி ரூபாய் பொருட்செலவில் மிகப்பிரமாண்டமாக தயாரித்துள்ளார். ஆக்சன் , காமெடி , அட்வென்ஜர் கலந்து உருவாகும் இப்படத்தின் அடுத்தகட்டப்படப்பிடிப்பு சென்னையில் விரைவில் துவங்க உள்ளது.

இன்று முதல் இப்படத்தின் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் வைத்து நடைபெறவுள்ளது. விறுவிறுப்பான கார் சேசிங் மற்றும் பாடல் காட்சிகள் இங்கே படமாக்கப்படவுள்ளன. இதை தொடர்ந்து அதிரடி சண்டை காட்சிகள் இமாலய மலைகளிலும் , மும்பை  மற்றும் ஐரோப்பாவிலும் படமாக்கப்படவுள்ளன. மேலும் அமெரிக்காவில் உள்ள மிகவும் அழகான லொக்கேஷன்களில் இப்படம் படமாக்கப்படவுள்ளது.

கார்த்தியின் ஸ்டைலிஷான லுக் மற்றும் மாஸான தோற்றம் படத்தில் புதுமையான ஒரு விஷயமாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளனர் படக்குழுவினர். இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் , பிரகாஷ் ராஜ் , ரம்யா கிருஷ்ணன் , அம்ருதா , விக்னேஷ் , டெம்பர் ( தெலுங்கு ) வில்லன் வம்சி ரவி , ரவி மற்றும் சிறப்பு வேடத்தில் கார்த்திக் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

தளபதி விஜய்யின் 'ஜனநாயகன்' பட கதை இதுதானா? லீக்கான ஸ்டோரி... ஷாக் ஆன படக்குழு..!
கொளுத்திப்போட்ட அருணின் அம்மா.. முத்துவுக்கு வில்லியாக மாறிய சீதா - சிறகடிக்க ஆசை சீரியலில் எதிர்பாரா ட்விஸ்ட்