'கரகாட்டக்காரன்' கனகாவா இது? எப்படி ஆகிட்டாங்க பாருங்க... ஆனா இந்த வயசுலயும் இப்படி ஒரு ஆசை!!

By manimegalai aFirst Published Sep 3, 2021, 1:48 PM IST
Highlights

இவர் திரையுலகை விட்டு விலகி சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர் திரையுலகை விட்டு காரணம், காதல் தோல்வி, மற்றும் உடல்நல பிரச்சனை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது நடிகை கனகா வெளியிட்டுள்ள வீடியோ மூலம், அவர் நல்ல விதமாக இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.
 

பழம்பெரும் நடிகை தேவிகாவின் மகள், கனகா நடிப்பார் என்பதை அவரே எதிர்பாக்கவில்லை என்றாலும், அவரது அழகு இவரை ஒரு திரைப்பட நடிகையாக மாற்றியது. 1989 ஆம் ஆண்டு, இசையமைப்பாளரும், இயக்குனருமான கங்கையமரன் இயக்கத்தில் வெளியான, கரகாட்டக்காரன் படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. 

தமிழ் மட்டும் இன்றி, மலையாள திரையுலகிலும் முன்னணி நடிகையாக இருந்த இவர் நடிப்பில் வெளியான, காட்ஃபாதர் என்னும் மலையாள திரைப்படம் 434 நாட்கள் ஒடி சாதனை பிரிந்தது. சுமார் 40 மேட்பட்ட படங்களில் நடித்து இவர், கடைசியாக தமிழில், 1999 ஆம் ஆண்டு வெளியான, விரலுக்கு ஏத்த வீக்கம் படத்தில், நடிகர் விவேக்குக்கு ஜோடியாக நடித்திருந்தார். மலையாளத்தில் 2000 ஆம் ஆண்டு வெளியான ஒரு 'Ee Mazha Then Mazha ' என்கிற படத்தில் நடித்திருந்தார்.

இவர் திரையுலகை விட்டு விலகி சுமார் 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. இவர் திரையுலகை விட்டு காரணம், காதல் தோல்வி, மற்றும் உடல்நல பிரச்சனை என பல்வேறு காரணங்கள் கூறப்பட்டு வருகிறது. ஆனால் தற்போது நடிகை கனகா வெளியிட்டுள்ள வீடியோ மூலம், அவர் நல்ல விதமாக இருக்கிறார் என்பது தெரியவந்துள்ளது.

இந்த வீடியோவில், மீண்டும் தன்னுடைய நடிப்பு ஆசையை கனகா வெளிப்படுத்தியுள்ளார். திரையுலகை விட்டு விலகி பல வருடங்கள் ஆகி விட்டதால் நான் என்ன செய்தாலும், அது பழையதாக தான் இருக்கும். எனவே என்னுடைய உடை, சிகை அலங்காரம், மேக்அப், செருப்பு என அனைத்தையும் நான் தற்போதைய காலத்திற்கு ஏற்ற போல் மாற்றி கொள்ளவேண்டும். நடிக்க ஆர்வம் இருப்பதால் இதனை சீக்கிரமாகவே கற்று கொள்ள முடியும் என நினைக்கிறன்.

குறைத்த பட்சம் 10 வருடம் ஃபீல்டில் இருந்தால் மட்டுமே சமாளிக்க முடியும். எனவே ஒரு மாணவியாக மாறி அனைத்தையும் கற்று கொள்ள ஆசைப்படுவதாக கூறியுள்ளார். இப்போது தனக்கு 50 வயசுக்கு மேல் ஆகி விட்டதால் இந்த வயசுல இப்படி ஒரு ஆசையா என்றும் கேட்பார்கள், ஆனால் நடிப்பில் மீண்டும் ஆர்வம் செலுத்தவேண்டும் என்றால் இதை பற்றியெல்லாம் கற்றுக்கொள்ள தான் வேண்டும். மேலும் இதுபற்றி உங்களுடனும் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். உங்களுடைய விமர்சனங்களையும் நீங்கள் முன் வைக்கலாம். அதில் இருந்து கூட நான் கற்றுக் கொள்வேன்” என்று பேசியிருக்கிறார். இவரது இந்த லேட்டஸ்ட் வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.


 

click me!