
பிக் பாஸ் வீட்டில் ஒரு கிராமத்து மனிதனாக எதார்த்தமாக வாழ்ந்தவர் நடிகர் கஞ்சா கருப்பு. இவர் பரணியை பற்றி அதிகம் கிண்டலடித்து, பரணியிடம் வீணாக சண்டை வாங்கி, அவரை அடிக்கும் வரை சென்றதன் காரணமாக மக்களின் ஆதரவு இல்லாமல் நாமினேட் செய்யப்பட்டு வெளியேற்றப்பட்டார்.
இந்நிலையில் இவரிடம் மீண்டும் நீங்களும், ஜூலி மற்றும் ஆர்த்தியை போல் பிக் பாஸ் வீட்டிற்கு விருந்தினர்கள் போல் வருவீர்களா என கேட்டதற்கு, சத்தியமாக நான் அந்த இடத்திற்கு செட் ஆக மாட்டேன் என கூறியுள்ளார். மேலும் நான் எதார்த்தமான மனிதன் எனக்கும் இந்த விளையாட்டிற்கும் சுத்தமாக ஒத்து வராது என திட்டவட்டமாக தெரிவித்தார்.
இந்த விளையாட்டு ஸ்கிரிப்டிங் என சொல்கின்றனர் அது உண்மையா என கேட்டதற்கு, அப்படி எதுவும் இல்லை, அப்படி இருந்தால் ஒருவரால் இங்கு இருக்கும் நாட்கள் முழுவதும் நடிப்பது கடினம். அங்கு உள்ளவர்கள் உண்மையாகத்தான் நடந்துகொள்கின்றனர் என தெரிவித்தார் கஞ்சா கருப்பு.
மேலும் இவர் தற்போது சந்தன தேவன், அருவா சண்ட, கிடா விருந்து உள்ளிட்ட படங்களில் மிகவும் பிஸியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.