இந்தியில் நாளை ஷூட்டிங் துவங்கும் ‘காஞ்சனா’...சரத் நடித்த திருநங்கை வேடத்துல நடிக்கிறது யார் தெரியுமா?

Published : Apr 21, 2019, 12:39 PM IST
இந்தியில் நாளை ஷூட்டிங் துவங்கும் ‘காஞ்சனா’...சரத் நடித்த திருநங்கை வேடத்துல நடிக்கிறது யார் தெரியுமா?

சுருக்கம்

டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2011ல் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘காஞ்சனா’ படம் இந்தியில் ரீமேக்கின் படப்பிடிப்பு நாளை மும்பையில் துவங்குகிறது. இப்படத்தின் மூலம் பிரபுதேவாவை அடுத்து ராகவா லாரன்ஸும் இந்தித்திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.  

டான்ஸ் மாஸ்டர் ராகவா லாரன்ஸ் இயக்கத்தில் 2011ல் ரிலீஸாகி சூப்பர் டூப்பர் ஹிட்டடித்த ‘காஞ்சனா’ படம் இந்தியில் ரீமேக்கின் படப்பிடிப்பு நாளை மும்பையில் துவங்குகிறது. இப்படத்தின் மூலம் பிரபுதேவாவை அடுத்து ராகவா லாரன்ஸும் இந்தித்திரையுலகில் இயக்குநராக அடியெடுத்து வைக்கிறார்.

லாரன்ஸ், ராஜ்கிரண் இணைந்து நடித்த ‘முனி’ படத்தின் இரண்டாம் பாகமாக வெளிவந்த ‘காஞ்சனா’வில் ராகவா லாரன்ஸ், சரத்குமார், லட்சுமி ராய் ஆகியோர் நடித்திருந்தனர். திருநங்கையாக சரத் நடித்திருந்த இப்படம் அவருக்கு திருப்புமுனையாக அமைந்தது. சுமார் 4 கோடி பட்ஜெட்டில் தயாரான அப்படம்30 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியது.

முன்னரே இதன் ரீமேக்கிற்காக பலர் அணுகியிருந்த நிலையில் தானே இயக்கும் முடிவில் இருந்த லாரன்ஸ், படத்தின் உரிமையை யாருக்கும் தராமல் இழுத்தடித்து வந்தார். தற்போது லாரன்ஸ் பாத்திரத்தில் இந்தியின் முன்னணி ஹீரோ அக்‌ஷய்குமார் நடிக்க படப்பிடிப்பு நாளை துவங்கவிருக்கிறது. சரத் நடித்த திருநங்கை பாத்திரத்தில் நடிக்க பலத்த போட்டி நிலவும் நிலையில் அப்பாத்திரத்தில் இந்தியத்திரையுலகின் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடிக்கிறார்.

இந்திக்காக கதையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.தமிழில் வெளியான காஞ்சனாவில் பேயை கண்டு நடுங்குபவராக லாரன்ஸ் நடித்திருப்பார். இந்தி ரீமேக்கில் பேயை நம்பாத வராகவும் பேயை கண்டு பயம் கொள்ளாதவராகவும் அக்ஷய்குமார் கேரக்டர் உருவாக்கப்பட்டுள்ளது. அவர் மனைவியாக கியாரா அத்வானி நடிக்கிறார். காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாகும் இந்தப் படத்துக்கு லட்சுமிஎன்று தற்காலிகமாக டைட்டில் வைத்துள்ளனர்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!