
தமிழக பாராளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வரும் ஏப்ரல் 18ஆம் தேதி நடைபெற உள்ளதால் ராகவா லாரன்ஸ் நடித்து இயக்கியுள்ள காஞ்சனா படத்தின் ரிலீஸ் தேதி மாற்றப்பட்டுள்ளது.
தேர்தல் காரணமாக ஏப்ரல் மாதம், ரிலீஸ் ஆவராத அறிவிக்கப்பட்ட சில திரைப்படங்களின் தேதிகளில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
அந்த வகையில், ஏப்ரல் 18ஆம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த 'காஞ்சனா 3' திரைப்படம் தற்போது ஏப்ரல் 19ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ராகவா லாரன்ஸ், ஓவியா, வேதிகா, கோவை சரளா, மனோபாலா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த படத்தின் முந்தைய பாகங்கள் வெற்றி பெற்றுள்ளதால், இந்த படத்தின் மீதும் ரசிகர்களுக்கு எதிர்ப்பார்ப்பு அதிகரித்துள்ளது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.