
போலந்து நாட்டைச் சேர்ந்த சிறுவன் ஸ்பிக்ஸ். ட்விட்டரில் நடிகர் கமலஹசனுக்கு ஒரு வேண்டுகோளை வைத்தார். கமல் நடித்து பல ஆண்டுகளுக்கு முன் வெளியான தெலுங்கு படம் "சகர சங்கமம்".
இப்படம் தமிழில் "சலங்கை ஒலி" என்று வெளியானது. தமிழிலும் சரி தெலுங்கிலும் சரி அப்படத்தில் வரும் தகிட ததுமி தகிடததுமி தந்தானா எனும் பாடலை சிறுவன் ஸ்பிக்ஸ் பாடி கமலுக்கு ட்விட்டரில் டாக் செய்துள்ளார்.
இந்த ட்விட்டை பார்த்தீர்கள் என்றால் உங்கள் கருத்தை தெரிவிக்கவும் என்று கமலிடம் கோரிக்கையும் வைத்தார். இதைப் பார்த்த கமல் சிறுவனுக்கு பதிலளித்துள்ளார்.
நிறைய குழந்தைகள் இந்த படலை தெலுங்கில் பாடுவார்கள் ஆனால் நீங்கள் ஸ்பெஷல். இந்த பாடலை ரசித்ததற்கு நன்றி என பதில் அளித்ததோடு இந்தியா அருமையான 15 மொழிகளை கொண்டுள்ளது என சிறுவனுக்கு ட்விட்டரில் பதிலளித்துள்ளார். அந்த பதிலை சிறுவன் மீண்டும் ட்விட் செய்து சந்தோஷப்பட்டுள்ளார். பொதுவாக கமலஹாசன் அனைவரையும் குழப்பும் படி ட்விட் செய்வார் என்று தான் பலரும் கூறுவார்கள். ஆனால் முதல் முறையாக சிறுவன் ஸ்பிக்ஸ்க்கு தெளிவாக ட்விட் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.