
உலகநாயகன் கமலஹாசன் இயக்கத்தில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளிவந்த விஸ்வரூபம் படத்தில் 60 கோடி தனக்கு நஷ்டம் ஏற்பட்டதாக மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா அரசு மீது குற்றம் சுமற்றியுள்ளார்.
இப்படத்தை வெளியிட கமல் திட்டமிட்டபோது இஸ்லாமியர்களுக்கு விரோதமாக ஒரு சில காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என கூறி அதற்கான தடை பெறப்பட்டது.
அதை எதிர்த்து கமலும் அவரது ரசிகர்களும் தொடர்ந்து போராடினர், அதே போல திரையுலகினரும் தடைக்கு கடும் கண்டனம் தெரிவித்தனர்.
ஒரு நிலையில் எதிர்ப்புகளை சமாளிக்க முடியாமல் படத்தின் மீதான தடையை அரசு நீக்க உத்தரவிட்டது.
இந்த சம்பவம் குறித்து கமல் தற்போது பரபரப்பான புகார் தெரிவித்திருக்கிறார். அவர் கூறியது:
என்னுடைய படம் விஸ்வரூபம் தடை செய்யப்பட்டது. சட்டப்பூர்வமாக எதிர்கொண்டு அத்தடை நீக்கப்பட்டது.
ஆனால் அப்போதைய அரசு மீண்டும் படத்துக்கு தடை விதித்தது. அதற்கு மக்களிடம் பலத்த எதிர்ப்பு எழுந்தது. அதன்பிறகே அத்தடை நீக்கப்பட்டது. என் மீதான இந்த தாக்குதலுக்கு பின்னால் என்னை முற்றிலுமாக அழிப்பதற்கான எண்ணம் இருந்தது என்றும்.
எனது மொத்த சொத்து உள்ளிட்ட எல்லாமே அடமானம் வைக்கப்பட்டது. நான் அவமானப்படுத்தப்பட்டேன் ஒருவழியாக அழிக்கப்பட்டேன். மறதி தேசிய நோயாக இருக்கிறது. ஊழலால் நாடு மூழ்கியிருக்கிறது என்று கருதுகிறேன்.
அவை எல்லாமே சிறிதாக எடுத்துக்கொள்ளப்படுவதுடன், மறக்கக்கூடியதாகவுமே இருக்கின்றன. ஆனால் நான் மறக்க மாட்டேன். இதனால் எனக்கு ரூ. 60 கோடி நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது. முறையாக அரசுக்கு வரி செலுத்தும் எனக்கு இது குறிப்பிடத்தக்க நஷ்டம். மக்களுக்கு நன்றி. இன்னமும் நான் உலவிக்கொண்டிருக்கிறேன். விஸ்வரூபம் 2ம் பாகத்துக்கு எந்த பிரச்னையும் வராது என்று எண்ணுகிறேன். இவ்வாறு கமல்ஹாசன் கூறினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.