சென்ராயன் வாழ்க்கையில் கமல் வாக்கு பலித்தது...! உறுதி செய்த மனைவி...! சொன்னதை செய்வாரா...?

Asianet News Tamil  
Published : Jul 23, 2018, 04:12 PM ISTUpdated : Sep 19, 2018, 02:45 AM IST
சென்ராயன் வாழ்க்கையில் கமல் வாக்கு பலித்தது...! உறுதி செய்த மனைவி...! சொன்னதை செய்வாரா...?

சுருக்கம்

kamal words ture in senrayan life

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கமல் வரும் இரண்டு நாட்களுமே, ரசிக்கும் படியாக இருக்கும் என்பதே பலரது கருத்து. அதே போல் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை கமல் ஒவ்வொரு வாரமும் நிறைவு செய்து வருகிறார். ஆனால் உள்ளே உள்ள போட்டியாளர்கள் தான் நிஜ முகத்தோடு விளையாடுகிறார்களா...? என தெரியவில்லை.

இந்நிலையில் நேற்றைய தினம் நிகழ்ச்சியின் முடிவில். கடந்த வாரம் பிக்பாஸ் வீட்டிற்குள் விருந்தினர்களாக வந்த, குழந்தைகள் குறித்து கமல் கேள்வி எழுப்பினார்.

இதற்கு அனைவரும் சொல்ல வார்த்தைகளே இல்லை என அந்த குழந்தைகள் குறித்து மிகவும் பெருமையாக பேசினார்கள். கமல் இது குறித்து பேசும் போது தானாக கையை உயர்த்திய சென்ராயன். "சார் எனக்கு கல்யாணம் ஆகி 4 ஆண்டுகள் ஆச்சு இன்னும் குழந்தை இல்லை நீங்க அனுமதி குடுத்தா ஒரு குழந்தையை தத்து எடுத்து கொள்கிறேன் என்கிறார்".

இவரின் இந்த வார்த்தையில் நெகிழ்ச்சியடைந்த கமல்... பாலாஜியின் பெயரை கூறி நீங்கள் கேட்டீர்களே, இவர்களை யாரவது தத்து எடுப்பார்களா என்று..?  பாருங்க உங்கள் பக்கத்திலேயே இருக்கிறார் என் தம்பி என சென்ராயனை பெருமையாக பேசுகிறார். 

பின் சென்ராயனிடம் இதை மட்டும் செய்யுங்கள், அடுத்த வருடமே உங்கள் மனைவி கர்பமாக ஆவார் என கமல் கூறினார்.  

கமல் வாக்கு பலித்தது:

கமலின் வார்த்தை பலித்தது போல் தற்போது சென்ராயன் மனைவி உண்மையாகவே தான் கர்பமாக உள்ளதாக ஒரு பேட்டியில் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், "சென்ட்ராயன் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற பிறகு தான் மருத்துவர் இதை உறுதி செய்ததாகவும். பல நாள் ஏங்கிய இந்த சந்தோஷமான செய்தியை  சென்ராயன் வெளியே வரும்பொழுது சொல்வேன் என கூறியுள்ளார். 

எனினும், கமல் முன்பு தான் ஒரு குழந்தையை தத்து எடுத்து வளர்ப்பேன் என உறுதியாக கூறியுள்ள சென்றாயனுடைய நல்ல என்னத்தை பலர் பாராட்டி வருகிறார்கள்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 லட்சம் பட்ஜெட், 800 மில்லியன் வியூஸ், 3 கோடி வருமானம்.! தமிழ் மட்டுமல்ல இந்தியாவையே ஆட்டி படைக்கும் ஹிட்டு சாங்.!
Vijay Deverakonda Wedding : அம்மாடி எவ்வளவு அழகு.! இதுவரை பார்க்காத போட்டோக்களை வெளியிட்ட விஜய் தேவரகொண்டா - ராஷ்மிகா மந்தனா.!