
திரிஷாவுக்கு பதிலளிக்கும் விதத்தில் அவருக்கு இணையாக இறங்கவேண்டாம் விட்டு விடுங்கள் என்று கமலஹாசன் டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு தடை என்றால் பிரியாணியையும் தடை செய்ய வேண்டும் என்று காளைகள் கொல்லப்படுவது பற்றி கருத்து சொன்ன கமலஹாசன் திரிஷாவை டுவிட்டரில் சமூக ஆர்வலர்கள் இளைஞர்கள் வறுத்தெடுப்பதை பார்த்து பாவம் அறியாத பெண் தெரியாமல் செய்து விட்டார்.
அவர் அளவுக்கு நீங்கள் இறங்க வேண்டாம், கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம் என்று தெரிவித்துள்ளார்.
எனது ஆதரவு எப்போதும் நாகரீகமாக உள்ளவர்களுக்கு மட்டுமே.
நீங்கள் இவ்வாறு திட்டுவதன் மூலம் நமது பக்கமுள்ள நியாயத்தை தவறாக சித்தரிக்க வைத்து விட கூடாது. பாவம் அறியாத பெண் போகட்டும் விட்டு விடுங்கள் என்கிற ரீதியில் டுவிட் செய்துள்ளார்.
அவரது டுவிட்டார் பக்கத்தில் அவர் தெர்வித்துள்ள கருத்து வருமாறு:
Pls stop hurting MsTrisha.அவர்க்கும் நமக்குமுள வேற்றுமை ஊரறியட்டும் கன்னியும் வாழ நம் காளையும் வாழ வழி செய்வோம். தர்க்கம் தொடர்க நேசத்துடன்
இவ்வாறு டுவிட்டரில் பதிவிட்டுள்ள கமலை டுவிட்டரில் போட்டு வறுத்தெடுக்கிறார்கள் நெட்டிசன்கள்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.