
கன்னட மக்களிடம் வருத்தம் தெரிவித்திருந்த சத்யராஜ் பெரிய மனுஷன் என்று நடிகர் கமல்ஹாசன் கூறியுள்ளார்.
கடந்த 2008ஆம் ஆண்டு சத்யராஜ் காவிரி விவகாரம் தொடர்பாக தமிழ் திரைப்படக் கலைஞர்கள் சார்பாக கண்டன கூட்டம் நடைபெற்றது. இதில் விஜயகாந்த், ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் கலந்துகொண்டு பேசிய நடிகர் சத்யராஜ், “அங்கு வாட்டாள் நாகராஜ் என்கிற ஒரு பெரிய காமெடியன் இருக்கிறார். நல்லவேளை அவர் சினிமாவுக்கு வரவில்லை. வந்திருந்தால் வடிவேலுவை எல்லாம் மிஞ்சியிருப்பார்” என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், ராஜமெளலி இயக்கத்தில், பிரபாஸ், தமண்ணா, ராணா டகுபதி, அனுஷ்கா, சத்யராஜ், நாசர், ரம்யா கிருஷ்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் பாகுபலி-2 வெளியாகவுள்ளது. இதனையடுத்து திரைப்படத்தை கர்நாடகாவில் வெளியிட அனுமதிக்க மாட்டோம் என்று வாட்டாள் நாகராஜ் கொந்தளிப்புடன் கூறியுள்ளார்.
இதற்கிடையில், நடிகர் சத்யராஜ் தனது பேச்சு யாரையாவது புண்படுத்தி இருந்தால் மன்னித்து விடுங்கள் என்று வெளிப்படையாக அறிவித்தார். ஆனாலும், கன்னட சலுவாளி இயக்கத் தலைவர் வாட்டாள் நாகராஜ் தலைமையில், நடிகர் சத்யராஜ் அவர்களின் உருவபொம்மை எரிக்கப்பட்டது.
இந்நிலையில் இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள நடிகர் கமல்ஹாசன், “பிரச்சனையான சூழ்நிலையிலும் சுயமரியாதையுடன் நடந்துகொண்ட நடிகர் சத்யராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். விருமாண்டியில் வரும் வசனத்தைப் போல ‘மன்னிப்பு கேக்குறவன் பெரிய மனுஷன்’. அற்புதம்” என்று தெரிவித்துள்ளார்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.