’ஆபரேசன் செய்து கொண்டேன்... என்னை அவமானப்படுத்தாதீர்கள்...’உருவத்தில் அடியோடு மாறிப்போன கமல் மகள்..!

Published : Mar 02, 2020, 11:21 AM IST
’ஆபரேசன் செய்து கொண்டேன்... என்னை அவமானப்படுத்தாதீர்கள்...’உருவத்தில் அடியோடு மாறிப்போன கமல் மகள்..!

சுருக்கம்

கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஷ்ருதி ஹாசனை, சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பலரும் தொடர்ந்து கேலி செய்து வந்தனர். இதனால் மன அதிருப்தியடைந்த அவர், அந்தக் கேலி, கிண்டல்களுக்கு தனது சமூகவலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். 

கமல்ஹாசனின் மூத்த மகளும் நடிகையுமான ஷ்ருதி ஹாசனை, சமூக வலைத்தளங்கள் வாயிலாகப் பலரும் தொடர்ந்து கேலி செய்து வந்தனர். இதனால் மன அதிருப்தியடைந்த அவர், அந்தக் கேலி, கிண்டல்களுக்கு தனது சமூகவலைதள பக்கத்தில் பதிலடி கொடுத்துள்ளார். 

“நான் மற்றவர்களின் பேச்சுகளைக் கேட்டு வாழ்பவள் அல்ல. தொடர்ந்து என்னைச் சிலர், ‘பருமனாகிவிட்டாய்' ‘இளைத்துவிட்டாய்' என்று கமெண்ட் அடிப்பதைத் தவிர்க்கலாம். தற்போது நான் எடுத்துள்ள இரண்டு படங்களும் 3 நாள் இடைவெளியில் எடுக்கப்பட்டவை. நான் சொல்ல வருவதைப் பல பெண்களால் உணர்ந்து கொள்ள முடியும். 

எனது ஹார்மோன்களின் கருணையில்தான் எனது மனதையும் உடலையும் சரிவர வைத்திருக்கிறேன். எனது வலியும் உடல் மாற்றமும் சுலபமல்ல. ஆனால், நான் வந்த பயணத்தை என்னால் பகிர்ந்து கொள்ள முடியும். எந்த ஒரு நபரும் இன்னொரு நபர் பற்றி ஒரு முன்முடிவுக்கு வரக்கூடாது. ஆமாம், நான் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து கொண்டேன். அதைச் சொல்வதில் எனக்கு எந்த அவமானமும் இல்லை. இதுதான் என் முகம். இதுவே என் வாழ்க்கை. பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி நான் விளம்பரம் செய்கிறேனா? இல்லை, அதை எதிர்க்கிறேனா? இது நான் எடுத்த முடிவு.

நமக்கும், மற்றவர்களுக்கும் நாம் செய்யக்கூடி மிகப் பெரிய உதவி, நம் உடல் அளவிலும் மனதளவிலும் ஏற்படும் மாற்றங்களைப் புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்வதுதான். அன்பைப் பரப்புங்கள். என்னை ஒவ்வொரு நாளும் நானே அதிகம் நேசிக்கக் கற்றுக் கொள்கிறேன். ஏனென்றால், என் வாழ்க்கையின் மிகப் பெரிய காதல் கதை, என்னுடன் நானே கொண்டுள்ளதுதான். உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நினைக்கிறேன்,” என்று உருகி உருகி எழுதியுள்ளார். 

 

ஷ்ருதி, முன்னதாக போட்ட ஒரு இன்ஸ்டா போஸ்டுக்குப் பலரும், “நீங்க ரொம்ப வயதானவரா தெரியறீங்க”, “ரொம்ப இளைச்சிட்டீங்க” என்பது போல கமென்டுகளை பதிவிட்டிருந்தனர். அதற்குத்தான் ஷ்ருதி, இப்படிப்பட்ட நீண்ட விளக்கத்தைக் கொடுத்துள்ளார். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் ஆரோக்கியமும்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!