’ஜென்டில் மேன்’ படத்தில் நடிக்க டைரக்டர் ஷங்கர் முதலில் என்னிடம்தான் வந்தார்...ஆனால்...26 ஆண்டுகளாக கமல் மறைத்த ஃப்ளாஷ்பேக்...

By Thiraviaraj RMFirst Published May 19, 2019, 3:25 PM IST
Highlights

பார்த்திபனின் ‘புதிய பாதை’, ஷங்கரின் ‘ஜெண்டில்மேன்’ ஆகிய இரண்டு படங்களுமே நான் நடித்திருக்கவேண்டிய படங்கள். தேதிகள் ஒத்துவராததால் அவற்றில் நான் நடிக்க முடியாமல் போனது’ என்று ‘ஒத்தச் செருப்பு’ பட விழாவில் கமல் ரகசியம் உடைத்தார்.

பார்த்திபனின் ‘புதிய பாதை’, ஷங்கரின் ‘ஜெண்டில்மேன்’ ஆகிய இரண்டு படங்களுமே நான் நடித்திருக்கவேண்டிய படங்கள். தேதிகள் ஒத்துவராததால் அவற்றில் நான் நடிக்க முடியாமல் போனது’ என்று ‘ஒத்தச் செருப்பு’ பட விழாவில் கமல் ரகசியம் உடைத்தார்.

இன்று நடந்த பார்த்திபனின் ‘ஒத்தச் செருப்பு’ பட விழாவில் நீண்ட நேரம் பேசிய கமல் துவக்கத்தில் கொஞ்சம் அரசியல் பேசிவிட்டு பின்னர் நீண்ட ஃப்ளாஷ்பேக்குகளுக்கு பின்னோக்கிப் பயணமானார்,”இங்கே, ‘16 வயதினிலே’ முதல் பட அனுபவங்களை பாக்யராஜ் சொன்னார். நிறையபேர், முதல்படத்தில் என்னை அழைத்திருக்கிறார்கள். அதில் நடிக்காததற்கு ஷங்கருக்குக் கூட வருத்தம் உண்டு. ஆமாம்... ‘ஜென்டில்மேன்’ படத்தில் நடிக்கக் கேட்டு, பிரசாத் ஸ்டூடியோவில் சந்தித்துப் பேசினோம். ஆனால் அப்போது அது நடக்கவில்லை.

அதேபோல்தான் பார்த்திபனும் ‘புதியபாதை’ படத்தில் நடிப்பதற்காக என்னைத்தான் கூப்பிட்டார். அப்போது என்னிடம் தேதிகள் இல்லை. ‘ஒத்தசெருப்பு’ மாதிரி தனியொருவராக நான் நடிக்காமல், தனக்குக் கொடுத்துவிட்டதாக பார்த்திபன் சொன்னார். அதுமட்டுமல்ல... ‘புதியபாதை’யில் நான் நடிக்காமல் உங்களுக்கு நடிக்கக் கொடுத்ததையும் பெரிய சந்தோஷமாகப் பார்க்கிறேன். அந்த வாய்ப்பைப் பயன்படுத்தி முன்னேறினார் பார்த்திபன்.

முதல்படத்தில் சொன்ன அந்தப் பாட்டு பாக்யராஜுக்கு இன்னமும் மறக்கவில்லை. எனக்கும் மறக்கவில்லை. ‘16 வயதினிலே’ படத்தில் நாட்டுவைத்தியராக வருவார் பாக்யராஜ். பின்னாளில், தமிழ் சினிமாவின் நாட்டு வைத்தியராகவே ஆகிவிட்டார்.

சுனில்தத் ‘யாதே’ எனும் படத்தில் ‘ஸோலோ ஆக்ட்’ பண்ணியிருக்கிறார். ஹாலிவுட்டிலும் பலர் செய்திருக்கிறார்கள். அந்த வரிசையில் பார்த்திபனும் இடம்பிடித்துவிட்டார். அவரை வாழ்த்தவேண்டும். அப்படி வாழ்த்துவதுதான் வளர்க்கும். தன்னம்பிக்கையை விட வாழ்த்துதான் வளர்க்கும்.

தமிழ் சினிமாவில் எஸ்.பி.முத்துராமனை நான் குழந்தையாக இருந்த காலத்திலிருந்தே பார்த்துக்கொண்டிருக்கிறேன். எந்த விழாவாக இருந்தாலும், எவருடைய விழாவாக இருந்தாலும் அதை தன் விழாவாக நினைத்து முன்னே நிற்பார். நல்லதாக நாலு வார்த்தை பாராட்டுவார். இந்தப் பண்பு, பார்த்திபனிடம் உண்டு. இந்த விஷயத்தில், எஸ்.பி.முத்துராமனின் வாரிசு என்று பார்த்திபனைச் சொல்லுவேன். என் விழாவுக்குக் கூட அப்படி வந்து பல விஷயங்கள் செய்திருக்கிறார் பார்த்திபன்.இந்த ‘ஒத்தசெருப்பு’ திரைப்படம் வணிக ரீதியாகவும் பார்த்திபனுக்கு வெற்றியைத் தரவேண்டும் என வாழ்த்துகிறேன்’’என்றார் கமல்.

ஜெண்டில்மேனை மிஸ் பண்ணுனதுல தப்புல்ல... அதே தப்ப மறுபடியும் ‘இந்தியன் 2’வுல பண்ணாம முடிச்சுக் குடுத்துருங்க கமல் சார்.

click me!