ராமநாதபுரமா தென் சென்னையா...உச்சக்கட்ட குழப்பத்தில் கமல்ஹாசன்...

Published : Mar 23, 2019, 11:19 AM IST
ராமநாதபுரமா தென் சென்னையா...உச்சக்கட்ட குழப்பத்தில் கமல்ஹாசன்...

சுருக்கம்

தனது சொந்தத் தொகுதியான ராமநாதபுரத்தை விட தென்சென்னையில் அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் தனது தொகுதியை முடிவு செய்வதில் கடும் குழப்பத்தில் உள்ளார் கமல் என மக்கள் நீதி மய்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தனது சொந்தத் தொகுதியான ராமநாதபுரத்தை விட தென்சென்னையில் அதிக வாக்குகள் பெற வாய்ப்புள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளதால் தனது தொகுதியை முடிவு செய்வதில் கடும் குழப்பத்தில் உள்ளார் கமல் என மக்கள் நீதி மய்ய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஏற்கனவே 21 தொகுதிகளுக்கு மட்டுமே கமல் வேட்பாளர்களை அறிவித்துள்ள நிலையில், நாளை மாலை 6 மணிக்கு கோவை கொடிசியா வளாகத்தில் மக்கள் நீதி மய்யம் கட்சியின் பொதுக்கூட்டம் நடக்கிறது. இந்த பொதுக்கூட்டத்துக்கு வேட்பாளர் அறிமுக விழா மற்றும் மாற்றத்துக்கான துவக்கவிழா என்று கமல் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறார்கள். கமீலா நாசர்(மத்திய சென்னை), முன்னாள் காவல் அதிகாரி மவுரியா (வடசென்னை) இருவரை தவிர வேறு பிரபலங்கள் இந்த பட்டியலில் இடம்பெறவில்லை.

இந்நிலையில் நாளை மீதமுள்ள 19 தொகுதி வேட்பாளர் பட்டியலுடன் கட்சியின் தேர்தல் அறிக்கையும் வெளியாக இருக்கிறது. அதனால் தான் மாற்றத்துக்கான துவக்கவிழா என்கிறார்கள். முதல் பட்டியலை வெளியிட்ட போதே கமல்ஹாசன் தி.மு.க., அ.தி.மு.க. இரண்டு கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளையும் குறை கூறினார். அந்த வாக்குறுதிகளில் புதிதாக ஒன்றுமே இல்லை. இவை எல்லாமே சிறு வயதில் இருந்தே நான் கேட்ட வாக்குறுதிகள் தான். இவற்றை நிறைவேற்றுவதற்கான வழி முறைகளை மக்கள் நீதி மய்யம் முன்னெடுக்கும் என்றார். எனவே கமல் தனது கட்சியின் தேர்தல் அறிக்கையில் என்ன சொல்லப்போகிறார் என்பதை அரசியல் கட்சிகள் எதிர்நோக்கி இருக்கின்றன. 

இதுபோக கமல் தனது கட்சிக்காக 100 பேச்சாளர்களை தேர்வு செய்ய திட்டமிட்டுள்ளார். கட்சி உறுப்பினர்களில் நல்ல பேச்சாற்றல் மிக்கவர்கள், பொது மேடைகளில் பேச விருப்பம் உள்ளவர்களிடம் இருந்து ஏற்கனவே விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவர்களிடம் நேர்காணல் நடத்தி, 100 பேச்சாளர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். 

இன்னொரு பக்கம் தனது கட்சி நிர்வாகிகளில் சிலர் அவர் ராமநாதபுரத்தில் போட்டியிடுவதை விட தென் சென்னையில் போட்டியிட்டால் அதிக வாக்குகள் பெற முடியும். தென்சென்னையில் நிறைய சினிமாக்காரர்கள் இருக்கிறார்கள் என்று கமலையே குழப்பி வருவதாகவும் இதனால் கடந்த 4 நான்கு நாட்களாகவே அலுவலகத்துக்கு வரும் அனைவரிடமும் கமல் எங்கு போட்டியிடலாம் என்று கருத்து கேட்டு வருவதாக மநீம வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Dhanush: பாலிவுட் மருமகனாகிறாரா தனுஷ்? இணையத்தை ஆக்கிரமித்த திருமணச் செய்தி!
Actress Urvashi : மகளுடன் கமலை சந்தித்த ஊர்வசி! அம்மாவின் அழகை மிஞ்சும் மகளின் ப்யூட்டிபுள் போட்டோஸ்