#BREAKING அப்பாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது... கமலின் உடல் நிலை குறித்து மகள்கள் வெளியிட்ட அறிக்கை...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Jan 19, 2021, 10:05 AM IST
#BREAKING அப்பாவுக்கு அறுவை சிகிச்சை முடிந்தது... கமலின் உடல் நிலை குறித்து மகள்கள்  வெளியிட்ட அறிக்கை...!

சுருக்கம்

இந்நிலையில் இன்று நடிகர் கமல் ஹாசனுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். 

சட்டமன்ற தேர்தல் வர உள்ள நிலையில், மக்கள் நீதி மய்யம் கட்சி சார்பில் தலைவர் கமல் ஹாசன் சூறாவளி பிரச்சாரம் மேற்கொண்டு வந்தார். ஒருபுறம் பிக்பாஸ், மறுபுறம் தேர்தல் பிரச்சாரம் என பரபரப்பாக வேலை பார்த்துக் கொண்டிருந்தார்.கடந்த ஞாயிற்றுக்கிழமை பிக்பாஸ் நிகழ்ச்சியை முடித்த கையோடு கமல் ஹாசன் தரப்பில் இருந்து அறிக்கை ஒன்று வெளியானது. 

அதில், ​
“தமிழகத்தை தலை நிமிரச் செய்த ‘சீரமைப்போம் தமிழகத்தை’ எனும் முதல் கட்ட  தேர்தல் பிரசாரத்தைப் பூர்த்தி செய்திருக்கிறேன். ஐந்து பாகங்களாக ஐந்தாயிரம் கிலோ மீட்டர்கள் பயணித்து தமிழ் மக்களைச் சந்தித்திருக்கிறேன். மாற்றத்துக்கான மக்கள் எழுச்சியைக் கண்ணாரக் கண்டு திரும்பியிருக்கிறேன். அதுபோலவே கொரோனா பொது முடக்கத்தின்போது தொடங்கிய ‘பிக்பாஸ் - சீசன் 4’ தொலைக்காட்சி நிகழ்ச்சியையும் வெற்றிகரமாக முடித்திருக்கிறேன். இதுவும் மக்களுடனான பயணம்தான். நான்கரை கோடி தமிழர்களோடு வாராவாரம் உரையாடியதும் உறவாடியதும் மகிழ்ச்சியூட்டுகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு ஏற்பட்ட விபத்தில் காலில் ஓர் அறுவைச் சிகிச்சை செய்திருந்தேன். அதன் தொடர்ச்சியாக இன்னொரு சர்ஜரி செய்ய வேண்டி இருந்தது. அதுவரை ஓய்வு தேவை என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருந்தார்கள். அதை மீறித்தான் சினிமா வேலைகளும் அரசியல் வேலைகளும்  தொடர்ந்தன. பிரச்சாரத்தைத் தொடங்கும்போதே காலில் நல்ல வலி இருந்தது. அதற்கு மக்களின் அன்பே மருந்தாக அமைந்தது. இப்போது சிறிய ஓய்வு கிடைத்திருக்கிறது. ஆகவே, காலில் ஒரு சிறு அறுவைச் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறேன். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் என் பணிகளைப் புதிய விசையுடன் தொடர்வேன். மக்களை நேரில் சந்திக்க இயலாது எனும் மனக்குறையைத் தொழில் நுட்பத்தின் வாயிலாகப் போக்கிக்கொள்ளலாம். இந்த மருத்துவ விடுப்பில் உங்களோடு இணையம் வழியாகவும் வீடியோக்கள் வழியாகவும் பேசுவேன். மாற்றத்துக்கான நம் உரையாடல் இடையூறின்றி நிகழும். எண் மண்ணுக்கும் மொழிக்கும் மக்களுக்கும் சிறு துன்பம் என்றாலும் என் குரல் எங்கும் எப்போதும் எதிரொலித்தபடிதான் இருக்கும். இப்போதும் இது தொடரும்.” என்று அறிக்கையில் கமல்ஹாசன் தெரிவித்திருந்தார். 

இந்நிலையில் இன்று நடிகர் கமல் ஹாசனுக்கு அறுவை சிகிச்சை நடந்து முடிந்துள்ளது. இதுகுறித்து மகள்கள் ஸ்ருதி ஹாசன், அக்‌ஷரா ஹாசன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், இன்று காலையில் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில், மருத்துவர் திரு. ஜே எஸ்.என். மூர்த்தி அவர்களது ஒருங்கிணைப்பில், எலும்பியல் அறுவைச் சிகிழ்ச்சை நிபுணர் மருத்துவர் திரு மோகன்குமார் தலைமையில் எங்கள் அப்பாவிற்கு காலில் சர்ஜரி வெற்றிகரமாக நடந்து முடிந்தது அப்பா நலமாக உற்சாகமாக இருக்கிறார் . அப்பாவை  மருத்துவர்களும், மருத்துவப் பணியாளர்களும் மருத்துவமனை நிர்வாகமும் நல்ல முறையில் பார்த்துக்கொள்கிறார்கள். நான்கைந்து நாட்களுக்குப் பின் அப்பா வீடு திரும்புவார். சில நாட்கள் ஓய்வுக்குப் பின் மீண்டும் மக்களைச் சந்திப்பார். மகிழ்விப்பார் அனைவரது அன்பிற்கும் பிரார்த்தனைகளுக்கும் எங்களது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறோம் எனக்குறிப்பிட்டுள்ளனர். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அருண் விஜய்யின் 'ரெட்ட தல' 25-ல் ரிலீஸ்; டிரெய்லருக்கு அமோக வரவேற்பு
பிரம்மாண்ட கூட்டணி! ‘டேவிட் ரெட்டி’ படத்தில் ராம் சரண் - சிம்பு கேமியோ? மிரட்டும் அப்டேட்!