
இந்தியன் 1996 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஷங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன்,மனீஷா கொய்ராலா, சுகன்யா, கவுண்டமணி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். A. M. ரத்னம் தயாரிப்பில் உருவான இத்திரைப்படத்தை சூர்யா மூவீஸ் வெளியானது.
உலக நாயகன் கமல்ஹாசன் சுதந்திரத்துக்குப் போராடும் வீரனாக… லஞ்சத்துக்குக் கொள்ளிபோடத் துணிந்த வயோதிக தியாகியாக.. வெள்ளி நரையும், சுருங்கிய முகமும், வயதான மிடுக்கான தளர்ந்த உடலும், தடுமாறாத உறுதியும் கொண்ட "இந்தியன்" தாத்தாவாக நடித்து இந்திய ரசிகர்களின் ஒட்டுமொத்த பாராட்டுக்களை உலகநாயகன் கட்டிக்கொண்ட படமாக அமைந்தது. உலகநாயகனுக்கு மூன்றாவது தேசிய விருதினை பெற்றுத் தந்ததோடு திரைத்துறையின் உயரிய விருதான ஆஸ்கார் விருதிற்காக இந்தியா சார்பில் பரிந்துரைக்கப்பட்டது.
இந்தியன் போன்ற சமுதாய சிந்தனைகள் நிறைந்த படங்கள் வர துவக்கமாய் அமைந்தது. "இங்கே மட்டும்தான் ஒருத்தன் தன் கடமையை செய்யறத்துக்கு லஞ்சம் கொடுக்கணும்" இந்த வசனம் இன்றளவும் பொதுமக்கள் அதிகமாக யோசிக்கவைத்தது.
இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் இருபது வருடங்கள் கழித்து மீண்டும் உருவாகவுள்ளதாக செய்திகள் கடந்த சிலநாட்களாக வெளிவந்த நிலையில் இந்த செய்தி தற்போது உறுதியாகியுள்ளது.
ஆம், ஷங்கர், கமல் மீண்டும் இணையும் 'இந்தியன் 2' படத்தை தமிழ் மற்றும் தெலுங்கில் தயாரிக்க பிரபல டோலிவுட் தயாரிப்பாளர் தில்ராஜூ தயாரிக்கவுள்ளதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கில் வெளியான 'தில்' என்ற படத்தின் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமானவர் ராஜூ, இவர் மகேஷ்பாபு, ஜூனியர் என்.டி.ஆர் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் வெற்றி படங்களை தெலுங்கில் தயாரித்துள்ளார். இந்த நிலையில் அவர் 'இந்தியன்' படத்தையும் தயாரிக்கவுள்ள செய்தி உலகநாயகனின் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
கடந்த சில மாதங்களாக ஆளும் அதிமுக அரசுக்கு எதிராகவும், தமிழகத்தில் நடக்கும் நிகழ்வுகளை தனது ட்விட்டர் பக்கம் மூலமாகவும், ஆளும் அரசை நேரடியாக விமர்சிக்கும் நடிகர் கமல் ஹாசன் அரசியலுக்கு வருவதற்காக அடுத்தடுத்த பணிகளில் உள்ள இந்த நேரத்தில், இந்தியன் படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்படுவதால் தற்போது அரசியல் நிகழ்வுகள் குறித்த காட்சிகள் இந்த படத்தில் அதிகமாகவே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.