எதிர்பாராததை எதிர்பாருங்கள்.... சொன்ன மாதிரியே செஞ்ச கமல்!! சிவகார்த்திகேயனுடன் கூட்டணி அமைக்கிறார்

By Ganesh PerumalFirst Published Dec 21, 2021, 8:40 PM IST
Highlights

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம்வரும் கமல்ஹாசன் (Kamal Haasan), அடுத்ததாக சிவகார்த்திகேயனுடன் (Sivakarthikeyan) கூட்டணி அமைக்க உள்ளாராம்.

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் சிவகார்த்திகேயன். இவர் நடிப்பில் அண்மையில் வெளியான ‘டாக்டர்’ படம் பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது. தற்போது இவர் கைவசம் டான், அயலான், சிங்கப்பாதை போன்ற படங்கள் உள்ளன. இதில் டான் மற்றும் அயலான் படங்களின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

அடுத்ததாக சிங்கப்பாதை படத்தில் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். அதேவேளையில் தெலுங்கிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளார். இதுதவிர கவுதம் கார்த்திக் நடித்த ரங்கூன் படத்தின் இயக்குனர் ராஜ்குமாருடன் கூட்டணி அமைக்க உள்ளார் சிவகார்த்திகேயன். இயக்குனர் ராஜ்குமார், ஏ.ஆர்.முருகதாஸிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் ஆவார்.

அதுமட்டுமின்றி தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியின் இயக்குனரும் இவர்தான் என்பதால், அந்தநிகழ்ச்சியின் தொகுப்பாளரிடம் தான் சிவகார்த்திகேயனுக்காக எழுதியுள்ள கதை குறித்து தெரிவித்துள்ளார். கமலுக்கு அந்தக்கதை மிகவும் பிடித்துப்போனதால், அப்படத்தை அவரே தயாரிக்க முன்வந்துள்ளாராம்.

தற்போது தனது ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தை தயாரித்து வரும் கமல், அடுத்ததாக சிவகார்த்திகேயன் நடிக்கும் படத்தை தயாரிப்பார் என கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

click me!