ரஜினியை பாராட்டுவதற்காக கமலை மட்டம் தட்டிய இயக்குநர்... கடுப்பான உலக நாயகன் ரசிகர்கள்...!

Web Team   | Asianet News
Published : Dec 13, 2019, 04:30 PM IST
ரஜினியை பாராட்டுவதற்காக கமலை மட்டம் தட்டிய இயக்குநர்... கடுப்பான உலக நாயகன் ரசிகர்கள்...!

சுருக்கம்

"அண்ணாமலை", "முள்ளும் மலரும்" படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கதாபாத்திரத்தை தான், கமல் ஹாசனால் நெருங்க முடியாது என குறிப்பிட்டிருந்தார் நவீன். அதனைப் பார்த்த தீவிர கமல் ரசிகர்கள் நவீன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். 

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் பிறந்தநாள் நேற்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. அவருக்கு அரசியல் கட்சி பிரமுகர்கள், திரைத்துறை பிரபலங்கள் என பல்வேறு தரப்பைச் சேர்ந்தவர்களும் வாழ்த்து தெரிவித்தனர். அரசியல் ரீதியாக ரஜினியுடன் கருத்துவேறுபாடு உள்ளவர்கள் கூட பிறந்தநாளை முன்னிட்டு தங்களது வாழ்த்துக்களை சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டனர். அப்படி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு வாழ்த்து கூறுவதற்காக இயக்குநர் நவீன் போட்ட பதிவு சர்ச்சையை கிளப்பியுள்ளது.

மூடர் கூடம், அக்னிச் சிறகுகள் படத்தின் இயக்குநர் நவீன் உலக நாயகன் கமல் ஹாசனின் தீவிர ரசிகர் என்று சொல்லிக்கொள்கிறார், ஆனால் அவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வாழ்த்துவதற்காக நேற்று டுவிட்டரில் போட்ட பதிவு அதற்கு அப்படியே நேர்மறையாக அமைந்துள்ளது. 

சூப்பர் ஸ்டாரின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த நவீன், ரஜினி ஒரு ஆகச்சிறந்த நடிகர் என்பதை என் போன்ற ஒரு தீவிர கமல் ரசிகன் சொல்லும்போதுதான் அழகாகவும் அர்த்தமுள்ளதாகவும் இருக்க முடியும். இந்த இரண்டு பாத்திரங்களையும் கமல் நெருங்கவே முடியாது. திரையில் அவருக்கான இடம் அவருக்கானது மட்டுமே இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் என ட்வீட் செய்திருந்தார்.

"அண்ணாமலை", "முள்ளும் மலரும்" படத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள கதாபாத்திரத்தை தான், கமல் ஹாசனால் நெருங்க முடியாது என குறிப்பிட்டிருந்தார் நவீன். அதனைப் பார்த்த தீவிர கமல் ரசிகர்கள் நவீன் மீது கடும் கோபத்தில் உள்ளனர். 

இதனால் கொந்தளித்துப் போன கமல் ரசிகர்கள் டுவிட்டரில் நவீனை வறுத்தெடுத்து வருகின்றனர்.  அந்த இரண்டு கதாபாத்திரங்களிலும் ரஜினி நன்றாக தான் நடித்திருக்கிறார், ஆனால் நெருங்க முடியாது என்ற வார்த்தைக்கு தான் கமல் அகராதியில் இடம் இல்லை என கமெண்ட் செய்து வருகின்றனர். 

பலர் 70களில் கமல் ஹாசன் நடித்த மலையாள படங்களின் கிளைமேக்ஸ் காட்சிகளைப் போய் பாருங்கள் என நவீனுக்கு அறிவுரை செய்துள்ளனர். வாழ்த்து சொல்கிறேன் என்ற பெயரில் நெருங்க முடியாது என்ற ஒற்றை வார்த்தையை விட்டு, கமல் ரசிகர்களிடம் வாங்கிக்கட்டிக் கொண்டிருக்கிறார் நவீன். 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!