பிக்பாஸ் கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் நடிப்பது கலாச்சார சீரழியவில்லையா? கமல் காட்டம்...

Asianet News Tamil  
Published : Jul 13, 2017, 09:59 AM ISTUpdated : Sep 19, 2018, 12:52 AM IST
பிக்பாஸ் கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் நடிப்பது கலாச்சார சீரழியவில்லையா? கமல் காட்டம்...

சுருக்கம்

Kamal explained Bigg boss does not the culture deteriorate

பிக்பாஸ் நிகழ்ச்சி கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் எல்லோரும் நடிக்கும் போது, கலாச்சாரம் சீரழியவில்லையா? என நடிகர் கமல் ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி இந்திய மக்களின் கலாச்சார பண்பாடுகளை சீரழிப்பதாகவும், இந்த நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல்ஹாசனை கைது செய்ய வேண்டும் என்றும் இந்து மக்கள் கட்சி, சென்னை போலீஸ் கமிஷனரிடம் நேற்று புகார் அளித்தது.  

இதனையடுத்து செய்தியாளர்களை சந்தித்த கமல் பேசியது; சட்டத்தின் மீது எனக்கு எப்போதும் நம்பிக்கை இருக்கிறது. அந்த சட்டம் என்னை பாதுகாக்கும் என நம்புகிறேன். என்னை கைது செய்யச் சொல்லும் அந்த கூட்டத்திற்கு பதில் சொல்ல வேண்டிய அவசியம் எனக்கு இல்லை. ஒருவேளை, நான் கைதாகும் சூழ்நிலை ஏற்பட்டால், அதை தவிர்க்க மாட்டேன், சட்டப்படி அதனை சமாளிப்பேன். 

பிக்பாஸ் கலாச்சாரத்தை கெடுக்கிறது என்றால், முத்தக் காட்சியில் எல்லோரும் நடிக்கும் போது, கலாச்சாரம் சீரழியவில்லையா? அப்போது ஏன் எந்த நடவடிக்கையையும் எடுக்க சொல்லவில்லை? அதில் கெட்டு போகாத கலாச்சாரம் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கெட்டு போகிறதா? ஹிந்தி, கன்னட மொழில் கூட பிக்பாஸ் நடந்தது. ஒருவேளை ஹிந்தி, கன்னடம் தெரியாததால் பிக்பாஸ் நிகழ்ச்சி புரியாமல் இருந்திருக்கும் போல. "சேரி பிஹேவியர்"  என்று காயத்ரி ரகுராம் கூறியதற்கு நான் பொறுப்பல்ல அது அவர் சொன்னது. அப்படி சொல்ல நான் எழுதிக் கொடுக்கவில்லை.

என்னை நம்பும் என் மக்களுக்கு நல்ல விருந்தளிக்க கடமைபட்டிருக்கிறேன், மற்றவர்களுக்கு அல்ல. இவர்களும், ஒருவகையில் எனக்கு வேண்டப்பட்டவர்கள் தான். எதனால் என்றால் தசாவதாரம் வெளியானபோது என்னை அவர்கள் கொண்டாடினார்கள். 

ஆனால், விஸ்வரூபம் வந்ததும் எதிர்த்தார்கள். அதற்காக, நான் எனது வேலையை செய்யாமல் இருக்க முடியுமா? இந்த எதிர்ப்பையெல்லாம் பார்த்தால் ஒன்றுமே செய்ய முடியாது. விருமாண்டி (சண்டியர்) படத்தின் பெயரை மாற்றச் சொல்லி பெரிய தொல்லை கொடுத்தார்கள். அதையும் சமாளித்தேன். அதன் பிறகு அதே அரசு இருந்த சமயத்தில், அதே தலைப்பில் வேறொரு படம் வெளியானது. இதை யாரும் தட்டிக் கேட்கவில்லை. ஏன், மக்கள் கூட கேட்கவில்லை. என தனது தரப்பு நியாயத்தையும் கூறியுள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

திருமணம் செய்ய வயது மட்டும் போதாது.. நம்பிக்கை மற்றும் புரிதல் அவசியம்! நடிகை பிரகதி ஓப்பன் பேச்சு!
ஆன்லைனில் ஏமாந்த ஜி.வி. பிரகாஷ்? ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த அந்த மர்ம நபர்! நடந்தது என்ன?