
பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பல எதிர்பாராத சம்பவங்கள் அரங்கேறியது. அதில் குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், கஸ்தூரி பிக்பாஸ் வீட்டிற்குள் வந்தது, நடிகர் சரவணனின் வெளியேற்றம், வனிதா வயல் கார்டு சுற்று மூலம் உள்ளே வந்தது என சொல்லிக்கொண்டே போகலாம்.
இதே போல் யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் நடிகர் கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் இருந்து தானே வெளியேறுவதாக கூறி வெளியேறினார். கவின் இந்த முடிவை எடுப்பர் என யாருமே எதிர்பார்க்கவில்லை.
பலர் தடுத்தும், தன்னுடைய முடிவு நியாயமானது என்றும், இந்த ஐந்து லட்சம் ரூபாய் கொடுக்கவில்லை என்றால் கூட நான் வெளியே செல்ல வேண்டும் என்கிற முடிவை எப்போதோ எடுத்து விட்டதாக கூறி சென்றார். இவர் வெளியேறிய அதிர்ச்சியில் இருந்து சாண்டி மற்றும் லாஸ்லியா ஆகியோர் தற்போது வெளியே வரவில்லை.
இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள புரோமோவில், ஏன் கவின் இப்படி செய்தார். என்ன இப்படி பண்ணிட்டாரு... இந்த மாதிரி கேள்விகளுக்கு எல்லாம், கவின் தான் பதில் சொல்ல வேண்டும். என கமல் கூறும் காட்சி தற்போது வெளியாகியுள்ளது.
இதன் மூலம் முதல் புரோமோவிலேயே மக்கள் மனதில் இருக்கும் கேள்விக்கு தன்னிடம் பதில் இல்லை என ஃபுல் ஸ்டாப் வைத்துள்ளார் கமல். எனவே இன்று பிக்பாஸ் நிகழ்ச்சியில் கவின் கலந்து கொண்டு, ரசிகர்கள் மனதில் இருக்கும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
தற்போது வெளியாகியுள்ள ப்ரோமோ இதோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.