கடனை அடைக்காமல் களவாணி 2 வெளி வரக்கூடாது... நீதிமன்றம் இடைக்கால தடை...!

Published : Jul 03, 2019, 05:32 PM IST
கடனை அடைக்காமல் களவாணி 2 வெளி வரக்கூடாது... நீதிமன்றம் இடைக்கால தடை...!

சுருக்கம்

விமல் நடித்த களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

விமல் நடித்த களவாணி 2 திரைப்படத்தை வெளியிட இடைக்கால தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சற்குணம் இயக்கி தயாரித்துள்ள படம் களவாணி 2. இப்படத்தில் நடிகர் விமல் மற்றும் ஓவியா நடித்துள்ளார். களவாணி படம் வெற்றி வெற்றதையடுத்து களவாணி 2 ஜூலை 5-ம் இன்று வெளியாக இருந்தது. இந்நிலையில் இந்த படத்தின் இணை தயாரிப்பாளராக உள்ள ஜெயக்குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். 

அந்த மனுவில் களவாணி திரைப்படத்தின் இயக்குநர் சற்குணம் தன்னிடம்  67 லட்சம் வாங்கியதாகவும், இத்தொகைக்கு 20 சதவீத வட்டியும், லாபத்தில் 20 சதவீத பங்கும் வழங்குவதாக ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் சற்குணம் கையெழுத்திட்டார். ஒப்பந்தப்படி திரைப்படம் ளெியாவதற்கு ஒரு வாரம் முன்பு பணத்தை அவர் திருப்பித் தரவேண்டும். ஆனால், பணத்தை திரும்பி தராமல் ரிலீஸ் தேதியை அறிவித்துள்ளனர். எனவே பணத்தை திருப்பித் தரும்வரை படத்தை வெளியிடுவதற்கு தடை விதிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். 

இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி புஷ்பா சத்தியநாராயணா முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி களவாணி 2 படத்தை வெளியிட இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நீலாம்பரி போல் திமிர் காட்டிய சாண்ட்ரா... படையப்பாவாக மாறி பதிலடி கொடுத்த கானா வினோத்..!
பயங்கரமான அப்டேட் உடன் ஆட்டத்தை ஆரம்பிக்கும் பராசக்தி... டிசம்பர் 18ந் தேதி ரெடியா இருங்க..!