நெல்லைத் தமிழில்  சூப்பர் ஸ்டார் …. பட்டையை கிளப்பும்  காலா டீஸர்….

 
Published : Mar 02, 2018, 08:19 AM ISTUpdated : Sep 19, 2018, 02:01 AM IST
நெல்லைத் தமிழில்  சூப்பர் ஸ்டார் …. பட்டையை கிளப்பும்  காலா டீஸர்….

சுருக்கம்

Kala Teaser released by dhanush

நடிகர் ரஜினிநாந்த் நடிப்பில் உருவாகியுள்ள காலா படத்தின் டீஸர்  நள்ளிரவு 12 மணிக்கு வெளியிடப்பட்டது. இது வெளியான ஒரு சில மணி நேரங்களிலேயே லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.

ரஜினி நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘காலா’. பா.இரஞ்சித் இயக்கியுள்ள இப்படத்தை தனுஷ் தனது வுண்டர்பார் நிறுவனம் மூலம் தயாரித்து வருகிறார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் பின்னணி வேலைகள் முழு வீச்சில் நடைபெற்று வந்தது.

இப்படத்தை அடுத்த ஏப்ரல் 27-ந் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதனால் ரசிகர்கள் பெரிய எதிர்பார்ப்பில் உள்ளனர். சமீபத்தில் இப்படத்தின் டீசர் மார்ச் 1ம் தேதி வெளியிடும் என்று தனுஷ் அறிவித்திருந்தார்.

ஆனால், சங்கராச்சாரியார்  மறைவுக்கு மரியாதை செலுத்தும் விதமாக ‘காலா’ டீசர் ரிலீஸ் தள்ளிவைக்கப்படுவதாக தனுஷ் தெரிவித்தார். இதனால் மார்ச் 2ம் தேதி காலை 10 மணிக்கு வெளியாகும் என்று அறிவித்திருந்தார்.

ஆனால் நள்ளிரவு  12 மணியளவில் காலா டீசரை தனது டுவிட்டர் பக்கத்தில் தனுஷ் வெளியிட்டார். அந்த டீசரில் ‘இந்த கரிகாலனோட முழு ரவுடித்தனத்த பாத்தது இல்ல..ல ..? பாப்பீங்க!!!’ என்னும் வசனம் இடம்பெற்றிருந்தது.

ரஜினிகாந்த் நெல்லைத் தமிழில் பேசியுள்ள காலா பட டீஸர் வெளியிடப்பட்ட ஒரு சில மணி நேரங்களில் லட்சக்கணக்கானோர் பார்த்தனர்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விஜயகாந்த் மகன் ஹீரோவாக பாஸ் ஆனாரா? ஃபெயில் ஆனாரா? கொம்புசீவி விமர்சனம் இதோ
2025-ல் 100 கோடிக்கு மேல் வசூலை வாரிசுருட்டியும் அட்டர் பிளாப் ஆன டாப் 5 படங்கள்