
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், இந்த வருடம் வெளியான 'காலா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தில் ரஜினியின் மூத்த மருமகளாக நடித்திருந்தவர் சுகன்யா ராஜா.
இவர் சிங்கப்பூரில் குடியுரிமை பெற்று வாழ்ந்து வந்தாலும், பூர்வீகம் திண்டுக்கல் தான். நடிப்பின் மீது தீவிர ஆர்வம் கொண்ட இவர், காலா படத்தில் நடிக்க வாய்ப்பு வந்ததும் எந்த மறுப்பும் தெரிவிக்காமல் உடனே நடித்து கொடுத்தார். 'காலா' படத்தில் நடிக்க ஒவ்வொரு முறையும் சிங்கப்பூரில் இருந்து வந்து நடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இவர் சிறு வயதில் இருந்தே தீவிர சூப்பர் ஸ்டார் ரசிகையாம். இதனை சமீபத்தில் ரஜினியை சந்தித்து தெரிவித்துள்ளார். மேலும் ரஜினி மக்கள் மன்ற செயல்பாட்டில் தன்னுடைய பங்கும் இருக்க வேண்டும் என ரஜினியிடம் தன்னுடைய ஆசையை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், சிங்கப்பூருக்கான ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் பட்டியல் ரஜினியின் ஒப்புதலுடன் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதில் ரஜினியின் காலா மருமகள் சுகன்யாவுக்கு செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த பதவி கிடைத்தது பற்றி சுகன்யா கூறியபோது, சிங்கப்பூர்ல ரஜினி சாருக்கு தனித்தனியா ஃபேன் க்ளப் நிறைய இருக்கு. தனித்தனியா இருக்கிறவங்களை ஒண்ணா சேர்க்கிறதுதான் எங்களோட நோக்கம். அத்தனை முக்கியமான ஒரு பொறுப்பை என்னை நம்பித் தந்திருக்கார். அந்த நம்பிக்கையை நிறைவேற்ற பாடுபடுவேன் என கூறியுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.