
பிரபல சினிமா நடன இயக்குனரான ரகுராமின் மகள் காயத்ரி ரகுராம். நடிகையான இவர், நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் வசித்து வருகிறார். இவர், ‘சார்லி சாப்ளின்’, ‘விசில்’ உள்ளிட்ட படங்களில் நடித்து உள்ளார். பல திரைப்படங்களில் நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். பல தொலைக்காட்சியில் நடத்தப்பட்ட நடன நிகழ்ச்சியில் ஜட்ஜாகவும் இருந்திருக்கிறார்.
சென்னை அடையாறு சத்யா ஸ்டூடியோ அருகே நேற்று முன்தினம் நள்ளிரவு அபிராமபுரம் போக்குவரத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக அடையாறை நோக்கி வெள்ளை நிற சொகுசு கார் ஒன்று அதிவேகத்தில் தாறுமாறாக வருவதை கண்ட போலீசார், அந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.
அதில் காரை ஓட்டி வந்தது நடிகை காயத்ரி ரகுராம் என்பது தெரிந்தது. கார் கண்ணாடியை கீழே இறக்கியதும் அவரிடம் இருந்து மதுபான வாடை வந்ததால் சந்தேகமடைந்த போலீசார், அவரை காரில் இருந்து இறங்கும்படியும், மது போதையை கண்டுபிடிக்கும் கருவியில் மூச்சு காற்றை ஊதும்படியும் கூறினர்.
ஆனால் காரில் இருந்து இறங்க மறுத்த நடிகை காயத்ரி ரகுராம், போக்குவரத்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. மேலும் தான் குடிக்கவில்லை என்று கூறி அந்த கருவியில் ஊதவும் மறுத்தார். காயத்ரியிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட போலிஸார் அவரைக் கட்டாயப்படுத்தி ஊதவைத்து அவர் போதையில்தான் இருக்கிறார் என்பதை உறுதி செய்தனர்.
போதையில் இருந்ததால் அவரை கார் ஓட்டவேண்டாம் என்று கூறிய போக்குவரத்து போலீசார், போலீஸ்காரர் ஒருவரை வைத்து காயத்ரி ரகுராமை அவரது காரில் நுங்கம்பாக்கம் மகாலிங்கபுரத்தில் உள்ள அவரது வீட்டில் கொண்டுபோய் விட்டனர். பின்னர் அவரது காரை அபிராமபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்து நிறுத்தினர்.
குடிபோதையில் காரை ஓட்டி வந்ததற்காக காயத்ரி ரகுராமுக்கு போக்குவரத்து போலீசார் ரூ.3,500 அபராதம் விதித்தனர். நேற்று காயத்ரி ரகுராம் அந்த அபராத தொகையை அபிராமபுரம் போக்குவரத்து போலீஸ் நிலையத்தில் செலுத்திய பிறகு தனது காரை அங்கிருந்து எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் காயத்திரி ரகுராம் இதனை மறுத்ததோடு, தன மீது உள்ள மனஸ்தாபம் காரணமாக பத்திரிகையாளர் ஒருவர் இந்த தகவலை வெளியிட்டதாக கூறி இருந்தார்.
இதைதொடர்ந்து தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டபோது காயத்திரி ரகுராமிற்கு மிகவும் தொகுழியாகிய, காஜல் புதிய விளக்கம் ஒன்றை கொடுத்துள்ளார். அதில் "இந்த சம்பவம் நடந்த போது தானும் அங்கு தான் இருந்ததாகவும்', இஷ்டத்துக்கு அடிச்சி விடுறீங்க, பிரீ யா விடுங்க டோன்ட் ஒர்ரி என பதிவிட்டுள்ளார்.
இதனால் யார் பொய் சொல்கிறார்கள் என ரசிகர்களே குழம்பி உள்ளனர்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.