கார்த்தியிடம் மீண்டும் 30 நாட்கள் கால்ஷீட் கேட்கும் லோகேஷ் கனகராஜ்...

Published : Oct 28, 2019, 03:08 PM IST
கார்த்தியிடம் மீண்டும் 30 நாட்கள் கால்ஷீட் கேட்கும் லோகேஷ் கனகராஜ்...

சுருக்கம்

இப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.  

மாபெரும் வெற்றியடைந்திருக்கும் கைதி படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க வெறுமனே 30 நாட்கள் கால்ஷீட் கொடுத்தால் போதும் என்று இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கேட்டிருப்பதாகவும், அவர் உடனே கேட்டால் கூட அப்படத்தில் நடிக்கத் தயாராக இருப்பதாகவும் நடிகர் கார்த்தி கூறியுள்ளார்.

இடையில் வெளியான சுமாரான படங்களால் கார்த்தியின் மார்க்கெட் டல்லடித்திருந்த நிலையில் கைதியின் வெற்றி அவரை ஏறத்தாழ சூர்யாவுக்கு இணையாகக் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில் கைதியின் வெற்றி குறித்துப் பகிர்ந்துகொண்ட கார்த்தி, இப்படம் எனக்கு முற்றிலும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது. படப்பிடிப்பு நடைபெறும் இடத்தில் அமைதியாக இருப்பதுதான் பொதுவான நாகரீகம். இது சில செட்டில் இருப்பதில்லை. நடிக்கும் போது அனைவருக்கும் அது தொந்தரவாக இருக்கும். ஆனால் இந்த செட்டில் அனைவரும் அமைதியாக இருந்தார்கள். இந்த கலாச்சாரத்தை இனிமேல் அனைவரும் பின்பற்றினால் நன்றாக இருக்கும்.

படம் முழுக்க லாரி ஓட்ட வேண்டுமென்பதால் ஒரு வாரம் பயிற்சி எடுத்தேன். நான் லாரி ஓட்டுவதைப் பார்த்த அனைவரும் லாவகமாக ஒட்டுகிறீர்கள் என்று வியந்து கேட்டார்கள். சினிமா என்றாலே எல்லாவற்றையும் பழகிக் கொள்ள வேண்டும் என்றேன். அந்த அனுபவத்தில் லாரி ஓட்டுவது எளிதல்ல என்பதை உணர்ந்தேன். இடது வலது என்று வளைத்து ஓட்டுவது மிகவும் கடினம். லாரியில் பயணம் செய்பவர்களை விட எல்லா வகையிலும் ஓட்டுனருக்கு தான் ஆபத்து அதிகம். மற்ற வாகனங்களை விட லாரி ஓட்டுவதற்கு மட்டுமல்ல லாரியில் இறங்கி ஏறுவதற்கு கூட அதிகமான சக்தி வேண்டும். லாரி ஓட்டுனர்களின் பெருமை இப்போது தான் புரிகிறது. தனது நிறுவனத்திற்காகவும் வாழ்க்கைக்காகவும் இரவு பகல் பாராமல் உழைக்கிறார்கள். அவர்களை நினைத்து பெருமை கொள்கிறேன்.

ரஜினிகாந்த், இளையராஜா, ஏ.ஆர்.ரஹ்மான் போல உச்சம் தொட்டவர்கள் அனைவரும் ஆன்மிகத்தில் ஈடுபாடு உள்ளவர்கள் தான். அது எப்பவும் நம்மை பாதுகாக்கும் ஒரு கருவியாக இருக்கும். ஆன்மிகத்தின் மீது எனக்கு நம்பிக்கை உள்ளது. ஆகையால், இயக்குநர் லோகேஷ் முதலிலேயே பட்டை போட வேண்டும் என்று கதையை எழுதிவிட்டார்.நான் வீட்டிலிருந்து எப்போது கிளம்ப்பினாலும் விபூதி பூசாமல் கிளம்பினது இல்லை. அது வளர்த்தவிதமாகக் கூட இருக்கலாம். படம் பார்த்து விட்டு. என் நம்பரை எப்படியோ பிடித்துகைதி குடும்பம் குடும்பமாக பேசுகிறார்கள். முடிந்தவரை எல்லொரிடமும் பேசி விடுகிறேன்.

என் அப்பா திரையரங்கில் ‘கைதி’யைப் பார்த்தார். சிறப்பான படம், அப்பா மகள் செண்டிமெண்ட் அனைவரிடமும் வெற்றியடையும். மற்றும் திரையரங்கப் பார்வையாளர்களுக்கான படம் என்றும் பாராட்டினார். எனக்கும் ஒரு மகள் இருப்பதால் இப்படத்தின் கதாபாத்திரத்தோடு சுலபமாக தொடர்புபடுத்திக்கொள்ள முடிந்தது. இயக்குநர் லோகேஷ் என்னைத் தொடர்பு கொண்டு ‘கைதி’ படத்தின் இரண்டாம் பாகத்திற்காக (‘கைதி 2’) 30 நாட்கள் கால்ஷீட் இருந்தால் முடித்து விடலாம். அவர் நாளையே அழைத்தால்கூட கிளம்பிப்போய்விடுவேன்’என்கிறார் கார்த்தி.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டபுள் கேம் ஆடும் கம்ருதீன், பாரு மற்றும் அரோரா; மூவரின் செயலால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்!
பாதி உண்மைக்கே வீட்டை விட்டு விரட்டப்படும் தங்கமயில், மீதியும் தெரிந்தால்… என்ன நடக்கும்?