தோற்று போய் நிற்கும் ஜனனி.! ஜீவானந்தத்தை ஜெயிக்க குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்? வெளியான ப்ரோமோ!

Published : Jul 24, 2023, 04:07 PM IST
தோற்று போய் நிற்கும் ஜனனி.! ஜீவானந்தத்தை ஜெயிக்க குணசேகரன் போட்ட மாஸ்டர் பிளான்? வெளியான ப்ரோமோ!

சுருக்கம்

எதிர்நீச்சல் சீரியலில், தோற்று போய்  நிற்கும் குணசேகரன்... ஜனனி மூலமாகவே ஜீவானந்தத்திடம் இருந்து 40 சதவீத சொத்தை கைப்பற்ற மாஸ்டர் பிளான் போடும் காட்சி தான் இன்றைய புரோமோவில் வெளியாகியுள்ளது.  

எதிர்நீச்சல் சீரியலில் இன்று என்ன நடக்க போகிறது என்பதை, தெரிவிக்கும் விதமாக தற்போது, ஜூலை 24 ஆம் தேதி ஒளிபரப்பாகும் எபிசோடின் புரோமோ வெளியாகியுள்ளது.

அப்பத்தாவின் சொத்துக்கள், தன்னுடைய கையை விட்டு சென்றதை அறிந்து, விரக்தியிலும்.. ஜீவானந்தத்தின் மீது கடும் கோபத்திலும் உள்ளார் குணசேகரன். ஜனனியாலும் இந்த தோல்வியை மனதார ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்றாலும், எப்படியும் ஜீவனந்தத்திடம் மோதி... சொத்துக்களை மீட்க வேண்டும் என்கிற என்னத்தோடு, அடுத்து என்ன செய்வது என தெரியாமல் தவித்து கொண்டிருக்கிறார்.

விஜே பிரியங்காவிடம் இருந்து கணவருக்கு பறந்த வக்கீல் நோட்டீஸ்? என்ன தான் பிரச்சனை.. உண்மையை உடைத்த பயில்வான்!

அதே போல் தன்னுடைய உயிர் தோழனான, கெளதம் கூட தனக்கு துரோகம் செய்து விட்டாரே என்றும்... அவர் ஜீவனந்தத்தின் ஆள் என்பதை அறிந்து, மிகுந்த மனஉளைச்சலில் தவித்து வருகிறார் ஜனனி.  நேற்றைய தினம், ஜீவானந்தத்தின் மீது, புகார் கொடுக்க குணசேகரன் காவல் சென்ற நிலையில், அவருக்கு முன்பே... ஜீவானந்தம் காவல் நிலையத்தில் இருந்தது உச்சகட்ட அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

டூர் போன இடத்தில் டூபீஸ் போட்டோஷூட்... ‘கண்ணழகி’ பிரியா பிரகாஷ் வாரியரின் செம்ம ஹாட் கிளிக்ஸ் இதோ

ஜீவானந்தம், குணசேகரனை விட சாமர்த்தியமாக செயல்பட்டு வருவதால்... நிலைகுலைந்து தன்னுடைய தம்பிகளிடம், சவால் விடும் விதத்தில், ஜனனி மூலமாக போன சொத்துக்கள் ஜனனி மூலமாகவே வர வைக்கிறேன் என கூறுகிறார். ஆடிட்டரும்... உங்கள் வீட்டு பெண்களால் மட்டுமே இந்த சொத்தை மீட்க முடியும் என கூறுகிறார். மற்றொரு புறம் ஜனனி, அப்பத்தாவின் பக்கத்தில் அமர்ந்து... அந்த ஜீவானந்தம் நல்லவன் இல்ல அப்பத்தா, நாம ஏமார்ந்து விட்டோம் என கூறுகிறார். குணசேகரன் வீட்டில் உள்ள பெண்கள், தன்னை பார்த்து பரிதாப படவேண்டும் என காரை விட்டு இறங்கும் போதே... அழுது புலம்பி பர்பாஃமென்ஸை அல்லி வீசுகிறார். எனவே இன்றைய தினம், என்னென்ன நடக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!