
ஜல்லிக்கட்டு போராட்டத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்ட ஜூலி, பின் பிரபலங்கள் கலந்து கொண்டு விளையாடிய, பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக உள்ளே நுழைந்தார். ஆரம்பத்தில் இவரை ரசிகர்கள் அதிகம் வரவேற்றாலும், சில சமயங்களில் மாற்றி பேசுவது, பொய் சொல்லுவதுமாக இருந்ததால் மக்கள் மத்தியில் இவருக்கு மிஞ்சியது என்னவோ கெட்டபெயர்கள் தான்.
பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறியதும், இவரை பலர் தொடந்து விமர்சித்து வருகின்றனர். மேலும் இவரை பற்றி எந்த தகவல் வெளியானாலும்.... கெட்ட வார்த்தைகளை பயன்படுத்தி சிலர் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கூட ஜூலியின் கார் போலீஸ் ஜீப் மீது மோதியதாகவும், பின் அவருடைய ஆண் நண்பர் போலீசை தாக்கியதாகவும் செய்திகள் வெளியானது. பின் அந்த விபத்து நடந்த இடத்தில் தான் இல்லை என ஜூலி விளக்கம் கொடுத்தார்.
இதைத்தொடர்ந்து தற்போது, வீடியோ ஒன்றை வெளியிட்டு... தன்னுடைய மனதில் உள்ள ஆதங்கத்தை கொட்டி தீர்த்துள்ளார்.
அதில் என்னை தொடர்ந்து பலர், சமூக வலைத்தளத்தில் கெட்டவார்த்தைகளால் கமெண்ட் செய்து வருகிறார்கள். என்னை அப்படி திட்டுவதால் அவர்களுக்கு என்ன வரப்போகிறது. நான் யாருக்காவது தீங்கு செய்தேனா...? என கேள்விகளை எழுப்பியுள்ளார். மேலும் முடிந்து போன பிக் பாஸ் நிகழ்ச்சியை வைத்து தற்போதும் தன்னை பலர் விமர்சித்து வருவதாகவும், நான் பொய் தானே சொன்னேன். இந்த உலகத்தில் யாருமே பொய் சொன்னது இல்லையா? என கண்களில் கண்ணீரோடு பல கேள்வி எழுப்பியுள்ளார்.
இவரின் இந்த வீடியோவிற்கு சிலர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், சிலர் மீண்டும் ஜூலியை வழக்கம் போல் கலாய்த்து வருகிறார்கள்!
அந்த வீடியோ இதோ:
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.