
நடிகர் மோகன்லால் நடித்து சமீபத்தில் வெளிவந்த "வெளிப்படிந்தே புஸ்தகம்" படத்தில் இடம்பெற்ற ஜிமிக்கி கம்மல் பாடல் மிகவும் பிரபலமாகிவிட்டது.
மேலும் இந்தப் பாடலுக்கு ஓணம் பண்டிகையையொட்டி கேரள மாநிலம் கொச்சியைச் சேர்ந்த இண்டியன் ஸ்கூல் ஆஃப் காமர்ஸ் மாணவிகள் ஒன்று கூடி நடனமாடி, அதனை யூடியூபில் பதிவேற்றம் செய்தது வைரலாகப் பரவியது.
இந்தப் பெண்கள் ஆடிய நடனத்தில், ஒட்டுமொத்த ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தவர் ஷெர்லின். இவரை தற்போது பலரும் பேட்டி எடுத்து வருகின்றனர். அப்படி ஷெரில் அண்மையில் ஓர் ஊடகத்திற்குக் கொடுத்த பேட்டியில் தனக்கு தல அஜித்தையே மிகவும் பிடிக்கும் எனக் கூறியுள்ளார். தனக்குப் பிடித்த நடிகர் என சூர்யாவைச் சொன்னதாக, சில ஊடகங்களில் உலா வருகிறது. அது வதந்தி எனக் கூறியுள்ளார்.
மேலும் இவர் கேரளாவின் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் காமர்ஸ் பாடத்தில் பட்டப் படிப்பு படித்துள்ளார். இவர் படிக்கும் காலத்தில் நிறைய நடன நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டுள்ளாராம். மேலும் இவருடைய நடனத்தைப் பார்த்து சினிமாவில் நடிக்கவும் வாய்ப்பு வந்ததாம். ஆனால் ஒரு நடிகையாக விருப்பம் இல்லாததால் தனக்குப் பிடித்த டீச்சர் துறையையே தேர்தெடுத்து தற்போது பணியாற்றி வருவதாகத் தெரிவித்துள்ளார் ஷெரில்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.