ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று?...படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்..

Kanmani P   | Asianet News
Published : Apr 18, 2022, 02:07 PM IST
ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று?...படப்பிடிப்பு பாதியில் நிறுத்தம்..

சுருக்கம்

பிரபல நடிகர் ஜெயம் ரவிக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதனால் ஜெயம் ரவி நடிப்பில் தயாராகி வரும் படத்தின் படப்பிடிப்பு பாதியில் நின்றுள்ளது.

பிரபல நடிகர் ஜெயம் ரவி சமீபத்தில் பூமி படத்தில் நடித்திருந்தார். ஓரளவு வெற்றியை மட்டுமே பெற்றிருந்த இந்த படத்தை தொடர்ந்து தற்போது ' ஜன கண மன ' பட இயக்குனர் அகமது மீண்டும் ஜெயம் ரவியுடன் இணைந்து பணியாற்றுகிறார் . இது குறித்து சமீபத்தில் ஜெயம் ரவி தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குனர் அகமதுவின் பிறந்தநாளுக்கு வாழ்த்து தெரிவித்து கேக்கின் படத்தையும் பகிர்ந்துள்ளார்.

ஜெயம் ரவியின் விருப்பத்திற்கு பதிலளித்த அகமது, அவருக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார். அதில் “பரஸ்பர நம்பிக்கை, அன்பு மற்றும் மரியாதையை வளர்க்கும் உண்மையான மனிதர்களை சந்திப்பது மிகவும் அரிது. எல்லாவற்றிற்கும் நன்றி @actor_jayamravi. 2 படங்கள் பின்னோக்கி, எங்கள் பயணம் தொடரட்டும். நீங்கள் தான் சிறந்தவர். என்று சூசகமாக புதிய படம் குறித்த அறிவிப்பை வெளியிட்டார்.

இந்தப் புதிய படத்தில் நயன்தாரா நாயகியாக நடிக்க உள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது . அதன்படி ஜெயம் ரவி, அகமது இணையும் புதிய படம் சைக்கலாஜிக்கல் த்ரில்லராக இருக்கும் என்று சொல்லப்படுகிறது..இதற்கிடையில், ஜெயம் ரவி, டாப்ஸி பண்ணு , ரஹ்மான் , அர்ஜுன் சர்ஜா மற்றும் நானா படேகர் நடித்துள்ள 'ஜன கன மன' படத்தின் படப்பிடிப்பு வேலைகள் முடிந்து தற்போது போஸ்ட் புரொடக்‌ஷனில் உள்ளது. அதோடு ஜெயம் ரவி ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' படம் விரைவில் வெளியாகும் என தெரிகிறது.

இந்நிலையில் , அகமது படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டிருந்த ஜெயம் ரவிக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. பின்னர் சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதோடு படப்பிடிப்பும் பாதியில் நிறுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

டாக்டருக்கு டாக்டர்; ஜோடி பொருத்தம் சூப்பர்; சரண்யா பொன்வண்ணனின் மகள் நிச்சயதார்த்த போட்டோஸ்!
கோலிவுட்டின் இளவரசன்: 2025ல் பொற்காலத்தை அனுபவித்த ஒரே ஒரு நடிகர்!