
கடந்த செப்டம்பர் மாதம் 22ம் தேதி முதலமைச்சர் ஜெயலலிதா, ஆயிரம் விளக்கு அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளித்துவந்த நிலையில், நேற்று இரவு 11.,30 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி காலமானார்.
இதையடுத்து அவரது உடல் போயஸ் கார்டனில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. பின்னர், அங்கிருந்து சென்னை அண்ணா சாலையில் உள்ள ஓமந்தூரார் தோட்டத்தில¢ உள்ளராஜாஜி அரங்கில் பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இதைதொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள், சினிமா நட்சத்திரங்கள் உள்பட பல்வேறு முக்கிய பிரமுகர்கள், முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தி சென்றனர்.
இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த், தனது மனைவி லதா, மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, மருமகன் தனுஷ் ஆகியோருடன் சென்று, முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு அஞ்சலி செலுத்தினார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.