
தமிழக முதல்வர் ஜெயலலிதா கடந்த ஒரு மாதமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் திரையுலகினர் அனைவரும் அவர் விரைவில் குணமாகி பணிக்கு திரும்ப வேண்டும் என்று பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
இந்நிலையில் பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா, முதல்வர் விரைவில் குணமாக சேலம் அருகே உள்ள சக்தி வாய்ந்த எழிலரசி காமாட்சி அம்மன் மற்றும் பெரியநாயகி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை செய்துள்ளார்.
இதுகுறித்து கே.ஆர். விஜயா கூறியபோது, “அன்புள்ளமும், எளிய குணங்களும் கொண்ட முதலமைச்சர் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல்நிலை விரைவில் குணமடைந்து, மீண்டும் பணிக்கு திரும்ப சக்தி வாய்ந்த நாவலுார் பெரியநாயகி, காமாட்சி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜை நடத்தினேன். அவர் உடல்நிலை சீராகி விரைவில் திரும்புவார்” என்று கூறினார்.
ஜெயலலிதா, கே.ஆர்.விஜயா இருவரும் இணைந்து கந்தன் கருணை', 'கன்னித்தாய்', 'அன்னை வேளாங்கன்னி' ஆகிய படங்களில் நடித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.