
பாலிவுட்டில் இருந்து தற்போது, தமிழுக்கு வந்திருக்கும் நிகழ்ச்சி "பிக் பாஸ்" . இந்த நிகழ்ச்சியை பற்றி எரிச்சல் ஆக்கும் அளவிற்க்கு சர்ச்சைகள் மிகவும் வேகமாக பரவி வருகிறது.
இந்த அனைத்து சர்ச்சைகளுக்கும் பலியாகியாகி உள்ள பலி ஆடு என்றால் அது, ஜல்லிக்கட்டு பெண் சிங்கம் ஜுலீ தான். இவரின் பேச்சு பொறுமையாக இருக்கும் கவிஞர் சினேகனை கூட சீண்டி பார்த்துள்ளது. மேலும் பலர் காரணமே இல்லாமல் இவர் மீது எரிந்து விழுவதாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் இவை அனைத்தையும் பொறுமையாக பார்த்துக்கொண்டிருந்த நடிகர் பரணி. ஜூலியை தனியாக அழைத்து, உன்னை தான் அனைவரும் டார்கெட் பண்ணுறாங்க, நீ அமைதியா இருக்காதே திருப்பி அடி என உசுப்பேற்றி உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.