ஜெய் பிறந்த நாளுக்கு அஞ்சலி கொடுத்த அதிர்ச்சி -  பலூனில் பறந்து வந்த கேக்...

Asianet News Tamil  
Published : Apr 08, 2017, 11:37 AM ISTUpdated : Sep 19, 2018, 03:07 AM IST
ஜெய் பிறந்த நாளுக்கு அஞ்சலி கொடுத்த அதிர்ச்சி -  பலூனில் பறந்து வந்த கேக்...

சுருக்கம்

jai birthday anjali wishes

தனி ஹீரோவாக ஒரு வெற்றி படத்தையாவது  கொடுக்க வேண்டும்  என போராடி வருபவர் நடிகர் ஜெய்.இவர் தற்போது அஞ்சலி - ஜனனி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வரும் பலூன் படத்தின் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

பலூன் படத்திற்கு பிறகு தன்னுடைய வர்த்தக அந்தஸ்து உயரும் என்ற நம்பிக்கையோடு இருக்கும் ஜெய், தனது பிறந்த நாளை, நேற்று பலூன் படக்குழுவினரோடு கொண்டாடினார். 

மேலும் ஜெய் மற்றும் படக்குழுவினருக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக, பலூன் படத்தின் கதாநாயகி அஞ்சலி இந்த விழாவில் கலந்து கொண்டு ஜெய்யை வாழ்த்தினார். அவருடைய வருகையை யாரும் எதிர்பார்க்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும்  ஜெய்க்கு ஆச்சரியம் கொடுக்கும் வகையில் பிறந்த நாள் கேக்கை, ஹெலிகேம் எனப்படும் பறக்கும் கேமராவில் கொண்டு வந்தார் அஞ்சலி. படக்குழுவினர் அனைவரும் ஜெய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து மகிழ்ந்தனர்.

மேலும் ஜெய் அஞ்சலி இருவரும் காதலித்து வருவதாக கூறி வரும் நிலையில் இதுபோன்ற செயல்களில் அஞ்சலி ஈடுபடுவது அவர்களது காதலை உறுதி படுத்தும் விதமாக இருக்கிறது என கூறப்படுகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

விநியோகஸ்தர்களுடன் தயாரிப்பாளர் திடீர் சந்திப்பு - 'ஜன நாயகன்' படக்குழுவின் அதிரடி மூவ்
தயாரிப்பாளரின் நஷ்டத்தை ஈடு செய்ய விஜய் எடுக்கும் அதிரடி முடிவு!