'ஜகமே தந்திரம்' ட்ரைலர் ரிலீஸ் தேதியை வெளியிட்ட படக்குழு..! உற்சாகத்தில் தனுஷ் ரசிகர்கள்..!

By manimegalai aFirst Published May 29, 2021, 7:13 PM IST
Highlights

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை சற்று முன் படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.
 

தனுஷ் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடி தளத்தில் ஜூன் 18 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், இந்த படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை சற்று முன் படக்குழு அதிகார பூர்வமாக அறிவித்துள்ளது.

'கர்ணன்' படத்திற்கு முன்னரே, 'ஜகமே தந்திரம்' படத்தின் அனைத்து பணிகளும் நிறைவு பெற்று விட்டதால், இந்த திரைப்படம் திரையரங்கில் வெளியாகும் என தனுஷ் ரசிகர்கள் எதிர்பார்த்த நிலையில் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்தது. படக்குழுவின் இந்த முடிவு ரசிகர்களை மட்டும் அல்ல நடிகர் தனுஷையும் அப்செட் ஆகியது.

அதன்படி, ஜூன் -18 ஆம் தேதி அன்று நேரடியாக நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் மொத்தம் 17  மொழிகளில், ஜகமே தந்திரம் படம் வெளியாக உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எத்தனையோ படங்கள் ஓடிடி தளத்தில் வெளியாகி இருந்தாலும், அதிக மொழிகளில் வெளியாகும் திரைப்படம் என்கிற பெருமையை  'ஜகமே தந்திரம்' பெற்றுள்ளது. மேலும் தனுஷ் ரசிகர்கள் பலர், வித்தியாசமான கெட்டப்பில் தனுஷ் இந்த படத்தில் கலக்கி உள்ளதால் இந்த படத்தை மிகவும் எதிர்பார்த்து கார்த்திருக்கின்றனர்.

'ஜகமே தந்திரம்' படத்தில் இருந்து ஏற்கனவே வெளியான, 'புஜ்ஜி' பாடல் வெளியாகி வேற லெவலில் ரீச் ஆகியுள்ள நிலையில், அதை தொடர்ந்து, கடந்த வாரம் இரண்டாவது சிங்கிள் பாடலான 'நேத்து' பாடல் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், ரிலீஸ் தேதி நெருங்கி கொண்டே இருப்பதால்... படத்தின் புரொமோஷன் பணிகளில் படு வேகம் காட்டி வருகிறது படக்குழு.

அந்த வகையில் தற்போது, 'ஜகமே தந்திரம்' படத்தின் ட்ரைலர் ரிலீஸ் குறித்த தகவலை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி ஜகமே தந்திரம் படத்தின் ட்ரைலர் ஜூன் மாதம் 1 ஆம் தேதி வெளியாகும் என தெரிவித்துள்ளனர். கார்த்திக் சுப்புராஜ் இந்த படத்தை இயக்குள்ளார். மேலும் தனுஷுக்கு ஜோடியாக அசுவாரய லட்சுமி நடித்துள்ளார்.  சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ள இந்த படத்தை, ஒய் நாட்  ஸ்டுடியோஸ் தயாரித்துள்ளது.

💥💥 https://t.co/pWNEtHoQzE

— Santhosh Narayanan (@Music_Santhosh)

click me!