டி.டி.வி.தினகரனுக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற மோசடி மன்னன்... பிரபல நடிகையை கட்டிப்பிடித்து செல்ஃபி..!

Published : Nov 27, 2021, 12:17 PM ISTUpdated : Nov 27, 2021, 01:04 PM IST
டி.டி.வி.தினகரனுக்காக லஞ்சம் கொடுக்க முயன்ற மோசடி மன்னன்... பிரபல நடிகையை கட்டிப்பிடித்து செல்ஃபி..!

சுருக்கம்

ஏப்ரல்-ஜூன் இடையே மோசடி வழக்கில் சுகேஷ் இடைக்கால ஜாமீனில் வெளிவந்தபோது படம் கிளிக் செய்யப்பட்டது.

நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸுடன் மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகஎ எடுத்துக் கொண்ட செல்ஃபி புகைப்படம் சமூக ஊடகங்களில் வெளிவந்து வைரலானதை அடுத்து புதிய சர்ச்சை ஏற்பட்டுள்ளது. சுகேஷ் செல்ஃபி எடுக்கும் போது நடிகையின் கன்னத்தில் முத்தமிடுவதைக் காண முடிந்தது.

ஏப்ரல்-ஜூன் இடையே மோசடி வழக்கில் சுகேஷ் இடைக்கால ஜாமீனில் வெளிவந்தபோது படம் கிளிக் செய்யப்பட்டது.

அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் மற்றும் சினிமா பிரபலங்களுடன் தொடர்பில் இருப்பதாகக் கூறி பலரை ஏமாற்றி பணம் மோசடி செய்ததாக கூறப்படுபவர், சுகேஷ் சந்திரசேகர். இரட்டை இலை சின்னத்தை மீட்க, டி.டி.வி. தினகரன் தரப்புக்காக, தேர்தல் ஆணையத்துக்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் கைது செய்யப்பட்டார். மேலும் பலரிடம் மோசடியில் ஈடுபட்டு கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்திருப்பதாக மத்திய அமலாக்கத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதனால் அமலாக்கத்துறை அதிகாரிகள் சுகேஷ் சந்திரசேகரின் பெங்களூரு, சென்னை பங்களாக்களில் அதிரடி சோதனை நடத்தினர்.

இதில், கணக்கில் வராத 2 கிலோ தங்கம், 82 லட்சம் ரொக்கம், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள 16 சொகுசு கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அவருடைய பங்களாவுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். இதற்கிடையில், சிறையில் இருந்தவாறே தொழிலதிபர் மனைவியை ஏமாற்றி, 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக சுகேஷ் மீது டெல்லி பொருளாதார குற்றவியல் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதில் அவர் காதலி லீனா மரியா பாலிடம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி இருந்தனர். மேலும் இந்த வழக்கில் பிரபல இந்தி நடிகை ஜாக்குலின் பெர்னாண்டஸ் சாட்சியமாக சேர்க்கப்பட்டார். அவரிடமும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர்.

இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகரின் வழக்கறிஞர் ஆனந்த் மாலிக், ஜாக்குலின் பெர்னாண்டஸும் சுகேஷும் காதலித்து வந்தனர். இது அவரிடம் இருந்தே பெறப்பட்ட தகவல் என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் ஜாக்குலின் வழக்கறிஞர் இதை மறுத்துள்ளார். ‘நடிகை ஜாக்குலின் அமலாக்கத்துறையில் சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் தன் வாக்குமூலங்களை முறையாகப் பதிவு செய்திருக்கிறார். விசாரணைக்கு எப்போதும் அவர் தயாராக இருக்கிறார். சுகேஷை தான் காதலிக்கவில்லை என்று என் திட்டவட்டமாக மறுத்துள்ளார். சுகேஷுடனோ, அவர் மனைவி லீனா மரியா பாலிடமோ ஜாக்குலினுக்கு எந்த தொடர்பும் இருந்ததில்லை’ என்று தெரிவித்துள்ளார்.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஜெயிலர் 2 ஷூட்டிங் ஸ்பாட்டில் களைகட்டிய சூப்பர்ஸ்டார் பிறந்தநாள் கொண்டாட்டம் - ரஜினியின் பர்த்டே கிளிக்ஸ் இதோ
கொளுத்திப்போட்ட அறிவுக்கரசி... ஜனனியின் பிசினஸுக்கு வேட்டு வைத்த ஆதி குணசேகரன் - எதிர்நீச்சல் தொடர்கிறது